லோக்சபா தேர்தல்: அரசு இணையதளங்களில் தமிழக முதல்வர் படம் முடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

லோக்சபா தேர்தல்: அரசு இணையதளங்களில் தமிழக முதல்வர் படம் முடக்கம்.


தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலை தொடர்ந்து, அரசு துறை சார்ந்த இணையதளங்களில், தமிழக முதல்வரின் படங்கள் முடக்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தால், தமிழக முதல்வர் படத்துடன் கூடிய அரசின் சாதனை விளம்பரங்களை அகற்ற, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது. இதையடுத்து, அரசு திட்டங்களில் முதல்வர் படத்தையும், "அம்மா' என்ற வார்த்தையையும் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் தி.மு.க., சார்பில் மனு கொடுக்கப்பட்டது.இ?த தொடர்ந்து, அம்மா உணவகத்தில் இருந்த முதல்வர் போட்டோவுக்கு வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. "அம்மா' குடிநீர் பாட்டில்களில் "ஸ்டிக்கர்' அகற்றப்பட்டது. தமிழக அரசு இணையதளம், அரசு துறை சார்ந்த இணையதளங்களில், முதல்வரின் படங்கள் முடக்கப்பட்டு உள்ளன. "போட்டோ கேலரி' பகுதியில், செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியின் போட்டோ மட்டும் உள்ளது.

இதே போல் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சித்துறை உள்ளிட்டஅனைத்து துறை இணையதளங்களிலும் முதல்வரின் படம் முடக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இணையதளத்தில், முதல்வர் பயோ-டேட்டா பகுதியில் மட்டும் ஜெ., படம் இடம் பெற்று உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி