தொடர்ந்து வழக்கு போட்டால் தேர்வாவது எப்படி? சான்றிதழ் சரிபார்ப்பில்கலந்து கொண்டாலும், வேலை கிடைக்குமா என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

தொடர்ந்து வழக்கு போட்டால் தேர்வாவது எப்படி? சான்றிதழ் சரிபார்ப்பில்கலந்து கொண்டாலும், வேலை கிடைக்குமா என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர்.


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் பதியப்படுவதால், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலும், வேலை கிடைக்குமா
என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), 2 ஆண்டுகளில், மூன்று டி.இ.டி., தேர்வுகளை நடத்தி உள்ளது. முதல், டி.இ.டி., தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு நேரத்தை குறைத்து வழங்கியதால் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், அடுத்த தேர்வில், தேர்வு நேரத்தை அதிகரித்து, டி.ஆர்.பி., உத்தரவிட்டது.முதல் இரு தேர்வுகளில், குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தேர்வர்கள், "தேர்வில், சரியான மதிப்பெண் வழங்கவில்லை" எனக் கூறி டி.ஆர்.பி., அலுவலகம் முன், தொடர்ச்சியாக, போராட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 25ல், டி.இ.டி., மூன்றாவது தேர்வு நடந்தது. இதில், 27 ஆயிரம் பேர் தேர்வாகினர். ஆனால், தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டாளர்களுக்கு சலுகை வேண்டும் எனக் கோரப்பட்டு அவர்களுக்கு, மதிப்பெண்ணில், ஐந்து சதவீத சலுகை அளித்து அரசு உத்தரவிட்டது.அதன்படி, தேர்வானவர்களின், பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதால், அதிலும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும் துவங்கியுள்ளது.

தமிழகத்தின் 32 மாவட்டங்களும், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் ஆகிய, ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. "ஒவ்வொரு மண்டலத்திலும், தினமும், 500 பேர் வீதம் சான்றிழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பணி நடக்கும்" எனவும் டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், "டி.இ.டி., தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு,பணி நியமனம் செய்ய வேண்டும். இதர கல்வி தகுதிகளுக்காக அளிக்கப்படும் சலுகை மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளக்கூடாது. சலுகை மதிப்பெண் அளிக்கும் அரசின் உத்தரவை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிலவும் குளறுபடிகளை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையிலும், சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ரவிச்சந்திரபாபு, "வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே, பணி நியமனம் இருக்கும்" என தெரிவித்து உள்ளார்.இதனால், நீண்ட போராட்டங்களுக்குப் பின், தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றாலும், வேலை கிடைக்குமா, கிடைக்காதா என, தெரியாமல், தேர்வர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

31 comments:

  1. Replies
    1. tet teacher eligible test na 55% nu sollitinga. 55% ku mela irukara ellarum pass. so apuram athula ethuku weitage podareenga. seniority base la edutha yarukum pathipu ila thana. so pass pannavangala seniority base la select pannungappa. 12 th mark, d.t.ed mark parkaringa. apuram, suga prasavama, kurai prasavama nu kuda papingala.

      Delete
  2. ippothavathu purinjukitingale.............?

    ReplyDelete
  3. ippothavathu purinjukitingale.............?

    ReplyDelete
    Replies
    1. Am no way responsible for the above comments..

      Case podapadradhala kalakamadaya onum ila. Nama TRB expect panra weightage vechrunda edhapthiyum kalakamo kavalayo pada theva ila.. yaaroda vaaipayum yaarum parika mudiyadu..

      Inooru vishayam case potadhala dhan re-result nu onnu vandhuchu adan moolama 2436 candidates pass ananga yarum baadhika padala.. so nothing harm will happen..

      Delete
  4. is there anybody put a case and got marks in tntet 2012 exams?

    ReplyDelete
  5. Na adicha mani trb ketucho Illaiyo kadavuluku ketruchu ........

    ReplyDelete
  6. tet 2012 la oru mark thevai, ippothu yethavathu case poda mudiyuma???

    ReplyDelete
  7. 150mark examku 150ku athigamana case.urupadum..

    ReplyDelete
    Replies
    1. Etharkuu yappothuthan mutru pulli varum karthika???

      Delete
    2. உருபடவே உருபடாது!

      Delete
    3. Intha yearkulla mutru pulli vachiruvanga.caseka?illa namakkanu than theriyala.

      Delete
  8. hai friend plz tell anyone there is any chance to get job.
    Paper 2 physics 72 wt. (tamil medium).
    plzzzz.....................

    ReplyDelete
  9. Malesiya vimanatha kandu pudikka MANTRAVAATHI ta "KURI"
    keakkurangalam. Vaanga pa ellarum MANTRAVAATHI kal ta pogalam. Teacher job kidaikuma? Namma AMMAYAAR pm aaavangala?? Maattangala nu keatpom.

    ReplyDelete
    Replies
    1. April 26 varai ella mantravaathigalum busy pa

      Delete
    2. hi mam, case epadi mudinthalum posting election mudinchu thanu therinjupochu, aparam ena panrathu nambikaiyoda wait panuvom.

      Delete
  10. anonymous mam உங்க கமெண்ட் நான் தொடர்ந்து படித்து இருக்கிறேன். கோர்ட், கேஸ் ஒரு பக்கம் நடந்தாலும், govt போடணும்னு நெனைச்ச வேகமா வேலைய முடிச்சு போட்டுருவாங்க. ஏன் போன தடவை job போடும் போது கேஸ் இல்லையா? இப்பு govt கு job போட விருப்பமில்லை. bcoz இப்பு job போட்டா எல்லாருக்கும் போட முடியாது. பாஸ் பண்ணியும் job கெடைக்காதவங்க அதிருப்தி இந்த election ல எதிரொலிக்கும். அடுத்து இன்னொரு காரணம் இப்படியே எல்லாரும் case போட்டா job போடுறது தள்ளி போகும். அதனால govt கு சில கோடி மிச்சமாகும். அதனால தான் job போடாம நாள கடத்துறாங்க. என்ன இருந்தாலும் ஜூன் ல ஒரு முடிவு தெரிஞ்சுரும். அடுத்த டெட் exam முன்னாடி job போட்டு ஆகணும். அப்பு தான் அடுத்த டெட் exam கல்ல்பரெட் பண்ண முடியும். டெட் rule படி minimum ஒரு தகுதி தேர்வு வைக்க வேண்டும். so எவ்வளவு case இருந்தாலும் ஜூன் ல job போடுருவங்க.

    ReplyDelete
    Replies
    1. Ama sir.. I agree with you.. Avangaluku venumna epdi venalun case ah mudipanga sir.. Orae naal la madurai la yerkanavae discuss panapatta kelvigalnu orae kaaranatha vechu 110 case ah dismiss pananga sir.. so avangaluku case periya vishayam ila.. But nama case kadasi vara live ah irunda edavadu questions la mark vara chances iruku. But wait pani dhan sir pakanum.. Oru particular time ku mela indha case ku elam madhipu kudukamatanganu enakum theriyum sir.. But andha time kula nama nenaikradu nadandrumnu dhan poradrom.. Kandipa nadakum sir..

      Delete
    2. k anonymous mam. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

      Delete
  11. i AM BC MATHS TET II MARK 85 MY WEIGHTAGE ANY CHANCE FOR POSTING

    ReplyDelete
    Replies
    1. this is to much boss 85 wt irruku ippadi kakkalama ......

      Delete
    2. visit TNTETMATHS.BLOGSPOT.IN to know Maths major position.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. hai friend plz tell anyone there is any chance to get job.
    Paper 2 physics BC 72 wt. (tamil medium).

    ReplyDelete
  14. sir i am paper 1 wt 79 sc chance for me any one tell?

    ReplyDelete
  15. S.Ganesan march 14,2014 at 8.00pm

    Please contact P.G Tamil 2012-2014 21 Grease Mark candidate court winners.

    contact no:9486350605

    ReplyDelete
  16. Ullladhum potchu nollakannanu aga pogudhu

    ReplyDelete
  17. Relaxation kodukamale irundhirukalam pola, epo yarukum uobayogam illama poiduchu. Cv mudichalum velai confirm illa, apuram yen endha cv. Poi vera velaya parpom.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி