TNPSC : தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிஎன்பிஎஸ்சி-யை கட்டுப்படுத்தாது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

TNPSC : தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிஎன்பிஎஸ்சி-யை கட்டுப்படுத்தாது?


நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் சட்டபூர்வ அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.யை கட்டுப்படுத்தாது. எனவே,பணி நியமனம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அதற்கு தடை
இல்லை என்று தமிழக தேர்தல் உயர் அதிகாரிதெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த5-ம் தேதிவெளியிட்டது. அன்றே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. மத்திய,மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிடவும் அரசு நலத் திட்டங்களை தொடரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பிலுள்ள தலைவர்களின் படங்கள்,கட்சி சின்னங்கள் ஆகியவற்றை அரசுசம்பந்தப்பட்ட பொருட்களில் இருந்து அப்புறப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நியமனங்களுக்குத் தடை

பள்ளி ஆசிரியர், கல்லூரி, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப் பட்டது என்ப தால்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்திக் கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்வு முடிவு மற்றும் இறுதி தேர்வுப் பட்டியலை தேர்வு வாரியம்வெளியிட முடியாது.

கடந்த11-ம் தேதி முதல் நடத்தவிருந்த உதவிப் பேராசிரியர் நேர்முகத் தேர்வை சென்னைப் பல்கலைக்கழகம் தள்ளிவைத்துவிட்டது.

தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த வாரம் குரூப்-4தேர்வு முடிவை வெளியிட்டது. அதில் ரேங்க் பட்டியல் இடம் பெற்றிருந்ததே தவிர,தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் வெளியிடப் படவில்லை.தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடவில்லையோ என்ற சந்தேகம் தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானத்திடம் கேட்டபோது, ''தேர்தல் நடத்தை விதிகள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த வாரம் குரூப்-4தேர்வு முடிவை வெளியிட்டது. அதில் ரேங்க் பட்டியல் இடம் பெற்றிருந்ததே தவிர,தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் வெளியிடப் படவில்லை.தேர்தல் நடத்தை விதி,சட்டபூர்வ அமைப்புகளான மத்திய அரசுப் பணியாளர்தேர்வாணை யம் (யு.பி.எஸ்.சி.),பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்),டி.என்.பி.எஸ்.சி. ஆகிய தேர்வாணையங்களைக் கட்டுப்படுத்தாது.

எனவே,அந்த அமைப்புகள் பணி நியமனங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதில் தடை ஏதும் கிடையாது''என்றார். டி.என்.பி.எஸ்.சி.க்கு நடத்தை விதிகள் பொருந்தாது என்பதால்,வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் குருப்-2தேர்வு,குரூப்-1மெயின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 comments:

  1. அப்போ டி.ஆர்.பி சட்டப்பூர்வமான அமைப்பு இல்லையா? ம்ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க ...

    ReplyDelete
  2. sir i am paper 1 wt 79 sc chace for me any one tell?

    ReplyDelete
    Replies
    1. Surely u will get a job.....don't worry about it....advance wishes nanba

      Delete
  3. When will release the final list? we are waiting.

    ReplyDelete
  4. will expect final list after election.

    ReplyDelete
    Replies
    1. call letter mattum vanthachu.

      Delete
    2. enna call letter mattum vanthachu?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. haris sir enna call letter vanthachu? clear ah sollunga.plz

      Delete
  5. it's really waste of time to be watching these cases.. final list will be issued after election only.. its very clear. we will surely get job by june only.... cool frns......

    ReplyDelete
  6. any body know this is for only 2012 or 2013 too
    http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html
    total vacancies can increase up to 2013 or 2014
    reply friends

    ReplyDelete
  7. g4 call letter postala vanthathunu oru news irukku athu unmaiya?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி