தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2014

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் செயல்படும்,
கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், அந்தந்த பகுதிபல்கலைகளின் கீழ் இருந்தன. கடந்த, சிலஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டது. இந்தபல்கலையில், தற்போது வரை, துணை வேந்தரே, கல்வி, ஆட்சிமன்றம் மற்றும் நிதிக்குழுவின்பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அப்பல்கலையின், கல்விக்குழுவிற்கான உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உள்ளார்.

இதன்படி, ஆசிரியர் தொழில் அறிவியல் துறை பேராசிரியர்கணேசன், மதிப்பு கல்வித் துறை பேராசிரியர் சவுந்தர்ராஜன், கல்வி உளவியல் துறை பேராசிரியர் கோவிந்தன்,கல்வி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன், பாடத்திட்ட திட்டமிடல் மற்றும் மதிப்பிடல்துறை பேராசிரியர் பாலகிஷ்ணன் ஆகியோர், நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஐவரும்,மூன்றாண்டுகளுக்கு, இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete

  2. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. துணை வேந்தர்,கல்வி குழு சிறப்பாக செயல்பட்டு பல்கலை கழகத்திற்கென சொந்த கட்டிடம்,அங்கீகாரம், பல்கலை கழகத்திலேயே துறைகளை துவங்கி மாணவர்கள் சேர்க்கை மற்றும் படித்த மாணவர்களுக்கான சான்றிதல்களை விரைவில் வழங்குதல் போன்ற பணிகளை ஒரளவிற்காவது நிறைவேற்ற வேண்டி முன்னால் மாணவர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி