அரசு பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களிடையே ஈகோ: பிப்ரவரி சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

அரசு பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களிடையே ஈகோ: பிப்ரவரி சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதி.


சிங்கம்பேட்டை அரசு பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களிடையே நிலவி வரும் ஈகோ பிரச்னையால் கடந்த மாத சம்பளம் இன்னும் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதியுற்று வருகின்றனர்.
பவானி அருகே உள்ள சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30க்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களிடையே கோஷ்டி பூசல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் கடந்த மாத (பிப்ரவரி) சம்பளம் வழங்கப்படவில்லை.வழக்கமாக பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளபட்டியலை தலைமையாசிரியர் தயாரித்து மாத இறுதியில் சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்படி பட்டியலில் உள்ளபடி ஒவ்வொரு ஆசிரியரின் வங்கி கணக்கிலும் சம்பளம் வரவு வைக்கப்படும். ஆனால் சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து கடந்த மாதத்திற்கான சம்பள பட்டியல் இந்த மாதம் முதல்வாரத்தில் தான் அந்தியூர் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் ஈகோ பிரச்னையால் சம்பள தாமதம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு இடையிலான பிரச்னையில் நடுநிலையான ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுவருகின்றோம்.

மாதம் தொடங்கி 15 நாட்கள் ஆகின்ற நிலையில் இன்னும் எங்களுக்கு கடந்த மாதம் சம்பளம் கிடைக்காமல் உள்ளது. சம்பள பட்டியல் கருவூலகத்திற்கு தாமதமாக அனுப்பி வைத்ததால் சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். இது பற்றி தலைமையாசிரியையிடம் கேட்டால் சரியான பதில் அளிப்பதில்லை. எனவே மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் தலையிட்டு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி னர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி