இந்த வார இறுதியில் பி.இ., மறுமதிப்பீடு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2014

இந்த வார இறுதியில் பி.இ., மறுமதிப்பீடு முடிவு


பி.இ., தேர்வுகளில் மறு மதிப்பீடு கோரி, மாநிலம் முழுவதிலும் இருந்து 1.25 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இதன் முடிவுகளை இந்த வார இறுதியில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது.

பொறியியல் மாணவ, மாணவியர் ஆண்டுக்கு, இரண்டு தேர்வுகளை எழுதுகின்றனர். தேர்வில்ஒரு பாடத்தில், 100க்கு, 50 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி. ஆனால், பெரும்பாலானோர் தேர்ச்சி பெறத் திணறுகின்றனர். கடந்த ஆண்டு வரை மறுமதிப்பீடு கோரும் மாணவர்கள், தாங்கள் படித்த கல்லூரி மூலமாகவே, அண்ணா பல்கலைக்கு விண்ணப்பிக்கும் வசதி இருந்தது. இதனால், தங்களின் விடைத்தாளை வாங்கிப் பார்த்து, கூடுதலாக, மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என மாணவர்களால் அறிய முடியவில்லை.

குத்து மதிப்பாகவே, பெரும்பாலானோர் விண்ணப்பித்தனர்.கடந்த ஆண்டு, நவம்பர்-டிசம்பரில் நடந்த தேர்வுக்கு பின்தான், விடைத்தாள் நகல் வழங்கும் திட்டத்தை, அண்ணா பல்கலை துணைவேந்தர், ராஜாராம் அறிமுகப்படுத்தினார்.இந்த திட்டத்திற்கு, மாணவர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், விடைத்தாளை வாங்கிப் பார்த்த மாணவரில் பெரும்பாலானோர், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வில்லை.விடைத்தாள் நகல் பெற்ற மாணவர், எந்த அளவிற்கு தேர்வை எழுதியிருக்கிறோம்; மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தால், கூடுதல் மதிப்பெண் கிடைக்குமா, கிடைக்காதா என்பதை, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியருடன் கலந்து ஆலோசித்து விடுவதால், மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள், கணிசமாக குறைந்துள்ளன.கடந்த 2013 நவம்பர் - டிசம்பரில் நடந்த தேர்வுகளுக்கு மறுமதிப்பீடு கோரி, மாநிலம் முழுவதிலும் இருந்து, 1.25 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த, 2012ல், மறுமதிப்பீட்டிற்காக 4.25 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம், மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை கணிசமாககுறைத்திருக்கும் நிலையில், &'&'இந்த வார இறுதியில், மறு மதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,&' என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.முந்தைய முறைப்படி, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க, ஒரு பாடத்திற்கு, 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்; மதிப்பெண் அதிகரித்தால், பணம், மாணவர்களுக்கு திருப்பி தரப்படும்; மதிப்பெண் அதிகரிக்காவிட்டால், பணம் திருப்பித் தரப்படாது.

இந்த திட்டத்தால், அண்ணா பல்கலைக்கு, அதிகளவில் வருவாய்கிடைத்தது.தற்போது, விடைத்தாள் நகல் வழங்கும் திட்டத்தில், விடைத்தாள் நகல் பெற, 300ரூபாய்; மறு மதிப்பீடு செய்ய, 400 ரூபாய் என, புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், "முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 50 லட்சம் ரூபாய் வருவாய் குறைந்து விட்டது" என பல்கலை வட்டாரம் தெரிவித்துள்ளது."பல்கலையின் வருவாயை விட, மாணவர் நலன் முக்கியம் என்பதால், புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது" என பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி