ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ்.


பிளஸ்–2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தகுதித்தேர்வு

மதுரை மாவட்டம் பாலமேட்டை சேர்ந்தவர் கண்ணன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன்,அவர்கள் பிளஸ்–2 பட்டப்படிப்பு போன்றவற்றில் பெற்ற மதிப்பெண்களையும்கணக்கிட்டு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது சரியான நடைமுறை அல்ல. பிளஸ்–2, பட்டப்படிப்பை பொறுத்தமட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் படிப்பை முடித்து இருப்பார்கள். சில ஆண்டுகள் தேர்வு மிக எளிதானதாக இருந்து இருக்கும். சில நேரங்களில் கடினமாக இருந்து இருக்கும்.

ரத்து செய்ய வேண்டும்

எனவே, மதிப்பெண் வேறுபட வாய்ப்பு உள்ளது. அதே போன்று பட்டப்படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்து இருப்பார்கள். சுலபமான பாடங்களை எடுத்து படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பர்.எனவே, பிளஸ்–2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க 5.10.2012 அன்று பிறப்பித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதே போன்று பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதாவது, தேர்வு செய்யப்பட்டவர்கள்பிளஸ்–2, பட்டப்படிப்பில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றனர்?, அவர்களுக்கு கூடுதலாக எத்தனை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படுவது இல்லை. அதே போன்று இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதையெல்லாம் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நோட்டீசு

இதே போன்று பாலமேட்டை சேர்ந்த மோகன், கவியரசு, தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலை சேர்ந்த கணேஷ்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர்பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

38 comments:

  1. tet mark basis la pota ellorukume nallathu both younger and elder

    ReplyDelete
    Replies
    1. Tet 2012 5% relaxation Expect for a good judgement today . ALL THE BEST cell 9842366268

      Delete
    2. Tet 2012 5% relaxation Expect for a good judgement today . ALL THE BEST cell 9842366268

      Delete
    3. Mr. Muthukumar not elder if tet mark wise will select only younger will get benefil not elder

      Delete
  2. You are absolutely correct Mr. muthu kumar. Selection should be based on tet marks only,

    ReplyDelete
  3. Yes TET mark basis la posting podunga athuthan correct..

    ReplyDelete
  4. Tet 2012 5% relaxation Expect for a good judgement today . ALL THE BEST cell 9842366268

    ReplyDelete
    Replies
    1. Mr. saravanan sir all the best will get good judgement today

      Delete
    2. today entha caselistla varuthu.inaiku case pathi entha detailsum illai.appuram epdi soldringa

      Delete
  5. +2 markla irundhu ippadi weightage IAS pani niyamanathula parthundha pathiperuku mela IAS officers inraki veetuku pogavendiyadhan.yena weightage systemo.

    ReplyDelete
  6. avangloda subjectla thane poti varum science gp edutha bsc major la scienc gp persons koda thane competion varum twelthla edutha commerc kum sciencekum mark differenc irunthalum arts weightag scienc weughtaga pathikathu

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொன்னீர் நண்பரே.

      Delete
    2. + 2 la maths, science padicu tu BA TML,ENG padika maatangala? Nalla yosinga

      Delete
    3. + 2 la maths, science padicu tu BA TML,ENG padika maatangala? Nalla yosinga

      Delete
  7. நியாயமான வழக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Mr.rajashekar krishnan,if you compare vocational ,arts and science group in +2.how do you feel about tet pattren,science maths 60 Questions and only history geography 60 questions in tet .no more words for me,i hope u r understand

    ReplyDelete
  10. tet paper 2 maths candidate cal me 9042811002

    ReplyDelete
  11. The weightage system is followed only same academic candidates. Even getting admission for MBBS, BE, they follow cutoff for the concern year only not in different years. In TET,

    why is the weightage system followed ?

    if it is followed ,no justice is found in recruitment.
    TET mark can be considered for recuitment

    ReplyDelete
    Replies
    1. மாறும்,மாறும்,மாறும்..தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் மாறும்...
      மாறும்,மாறும்,மாறும்..தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் மாறும்...
      மாறும்,மாறும்,மாறும்..தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் மாறும்...

      மாறும்,மாறும்,மாறும்..தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் மாறும்...

      மாறும்,மாறும்,மாறும்..தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் மாறும்...

      Delete
  12. weightage system is not totally wrong frns. a passed canditate may do any mal practice in tet exam. but his/her past academic performance will speak of his knowledge and talent. no one can change our past records. to some extent it is useful. in other sides it has some defects also in comparing younger with elders

    ReplyDelete
    Replies
    1. Dear Madam Rathika, Do you know anyone has done malpractice in TET. Those academic record are good, they are in GROUP -I employee. why are they come to teacher post?. I Know the system of valuation and awarding marks are vary from year to year. i have been observing the marks of +2 since 1996. After 2006, almost candidates percent in B.ed is above 70 % only. So don't judge blindly. Very excellent teachers are working private schools years after year, many scored good marks because of those private teachers.

      Delete
    2. Rajaram Ramawaruvel நீங்கள் கடைசியாக சொன்ன தகவலினை மட்டும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்...இன்றைய நிலையில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு தான் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இடம் கொடுக்குகின்றன...இதனை கொண்டு அரசு பள்ளிகளை ஒப்பேடு செய்வது சரியல்ல..நல்ல ஆசிரயகள் தான் trb போட்டிதேர்வின் மூலம் அரசு தேர்ந்தெடுகிறது..ஆனால் இங்கு தனியார் பள்ளிகளுடன் போட்டியிட முடியாத நிலைக்கு காரணம் சூழ்நிலை..நீங்கள் அரசு பள்ளியில் ஆசிரியராகும் போது இது உங்களுக்கும் புரியும்.... தனியார் பள்ளிகளுடன் தற்போது எந்த கல்வியாளர்களும் அரசு பள்ளிகளை ஒப்பீடு செய்யமாட்டார்கள்...இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே...

      Delete
    3. தனியார் பள்ளிமாணவர்கள் நீங்கள் குறிப்பிட அந்த திறமையான ஆசிரியர்கள் வேலையிலிருந்து அனுப்பிய பிறகும் குறைவான மதிப்பெண் பெறுவார் என்று சொல்ல முடியுமா...முடியாது....அங்குள்ள நிலை வேறு...

      tet நண்பக தன்மை இந்தவருடம் எந்த தவறான மதிப்பீடும் இல்லாமல் சரியாக நடந்ததாக நீங்கள் நினைத்தால் அது தவறு ஏனென்றால் தேர்வின் போதே வினாத்தாள் சர்ச்சை எழுந்தது...இதுவரை cv முடித்தவர்களின் மாநில தரநிலை பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை....சென்ற ஆண்டு இறுதிபட்டியல் கூட வெளியிடப்படவில்லை....

      Delete
    4. Sri sir சொல்வது உண்மை....!
      தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் உறுதி...!
      வெற்றி நிச்சயம்...!

      Delete
    5. நண்பர் புதிய பாரதி அவர்களுக்கு...
      நண்பரே மன்னிக்கவும்... நான் இங்கு தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நியமனம் என்று எதையும் குறிப்பிடவில்லை.....
      தனியார்..அரசு பள்ளி ஒப்பீடு பற்றிதான் பேசியிருக்கிறேன்....

      Delete
    6. Dear friend, If a good trs come out from particular school, definitely the mode of marks will come down. Last year it happened, this is the one of the reasons appointment is not made immediately this year. Always govt is rich men hand. parents are pouring money to private schools to get admission. Even govt school teachers send their children to private schools because of mark. if the govt adopt private policy govt school student can score good marks.
      Here a trs told that he studied govt school by getting the income from news papers sales, now he passed TET. the concerned trs weightage is low. Can we judge his intellect is very less by comparing other candidates?.

      Delete
    7. சரி ஸ்ரீ நண்பரே...தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நியமனம் என்பது பற்றி என்ன நினைக்கறீர்கள்?

      Delete
    8. மன்னிக்கவும்நண்பரே... ஒரு சிலர் ஏழ்மையில் இருந்து குறைவான மதிப்பெண் பெற்றால் அதற்காக அனைவரும் அப்படி இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள்..அதிக அளவிலான சராசரி வேண்டுமானால் அப்படியிருக்கலாம்...ஆனால் எல்லோரும் அப்படி இல்லை இதற்க்கு நானும் ஒரு எடுத்துகாட்டு நானும் 8ம் வகுப்பிலிருந்துபகுதி நேர வேலைக்கு சென்றுதான் படித்தேன்..ஏன் +2 முடிக்கும் வரை மின்சார இணைப்பு கூட இல்லை..ஆனால் நான் இங்கு வேய்ட்டேஜ் மதிப்பெண்ணில் குறைந்து போகவில்லை...ஆசிரியர் பயிற்சியில் படித்த நண்பர்களில் அதிகம் கிராமப்புற நண்பர்கள்தான்...அதிகம் அரசு பள்ளிமாணவர்கள் தான்....

      Delete
    9. நண்பர் புதிய பாரதி நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன்..இதில் வெயிட்டேஜ் சிறந்த முறையாக இருக்கும்...எப்போதென்றால் இதில் ஒரு சிறு மாற்றங்கள் கொண்டு வரும்போது...
      நான் முன்பே சொன்னது தான் TET + வெயிட்டேஜ் + பதிவுமூப்பு+பணியனுபவம் ( 150+40+5+5) =200

      Delete
    10. Great sri...! for ur last two comments...

      Delete
  13. சரியாக சொன்னீர் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. Solomon sir.
      Oc enbadhu 31% open competition. Based on the highest mark scored for example if the starting cut off in English is 88, then starting from it to the no. Of posts(31% of no. Of vacancy)
      Ex.
      Vacancy - 2200
      31% of 2200 will be filled without considering their community. So oc 31% can be a fc or bc/MBC/sc/st. Only mark. Then rest of the posts(69% of vacancy) will be reservation quota.

      Delete
    2. Mr. Bairav Moothy sir,
      one day u published last year and this year vacancy in subject wise. Is it correct? how do you know about that sir? Please reply me.

      Delete
  14. வாழ்க.. நண்பர்களே...!
    உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
    தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் உறுதி...!
    வெற்றி நிச்சயம்...!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி