ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது: தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது: தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் நடக்கிறது.


தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 26 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பின்னர் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதம் குறைத்து (55 சதவீதமாக) அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால், தகுதித்தேர்வில்கூடுதலாக சுமார் 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு (முதல் தாளில் தேர்ச்சி பெற்றோர்) மார்ச் 12-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புபணி நடக்கும் என்றும் அதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

தேர்தல் ஆணையம் அனுமதி

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டதால் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் பிரச்சினை எழுந்தது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதி வேண்டி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் கடிதம் எழுதினார்.தேர்தல் ஆணைய அனுமதி கிடைத்ததையடுத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை தொடங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது.ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது. ஒவ்வொரு மையத்திலும் தலா 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவினர் 25 பேரின் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு மண்டலத்திலும் 250 பேர் வீதம் 5 மண்டலங்களிலும் சேர்த்து தினமும் சுமார் 1,250 பேர் சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மண்டலம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. முதல் நாளில் 280 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சில ஆசிரியைகள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்.முன்னதாக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் பதிவு செய்வது குறித்து மையத்தின் மண்டல அதிகாரியான திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) எம்.ராஜமாணிக்கம், ஒருங்கிணைப்பு அதிகாரியான சென்னை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர் ஆர்.ஐயப்பன் ஆகியோர் விளக்கிக்கூறினர். சான்றிதழ் சரிபார்ப்பு பணியை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் டி.சீதாலட்சுமி ஆய்வுசெய்தார்.காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டனர்.

ஏப்ரல் 10-ல் முடிவடைகிறது

சென்னை மண்டலத்தில் 3,877 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இப்பணி மார்ச் 31-ம் தேதி வரை நடக்கும் என்று மண்டல அதிகாரி ராஜமாணிக்கம் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்ரல் 10-ம் தேதி வரை நடக்கும். அதன்பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

18 comments:

  1. when call letter will be published for paper-2 ?plz reply.

    ReplyDelete
    Replies
    1. Paper 2 CV May be april 2nd.

      Delete
    2. Suba sri mam just now i called to trb. they said " innum ready agala" so we dont know when will they ready for paper2 cv.

      Delete
    3. vinayagam sir april 2nd means 2nd day or 2nd week?

      Delete
  2. 2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இன்று வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஆய த ேத :ெதாட வழ... ேவைல ைடமா? ைடகாதா?எனேதவக கலக

    ஆயத ேத (.இ..,) ெதாடபாக, ெசைன உயமற ம மைர ைள வழக பயபவதா, சாத சபா கலெகாடா,ேவைல ைடமா எற கலக, ேதவக உளன. தவஅதசைக : தழக வ உளஅர பக, ஆயகைள பயமவதகாக, ஆயேத வாய (.ஆ..,), இர ஆக,  .இ.., ேதகைள நட உள. த, .இ.., ேத, ஆ லச ேப பேகறன.ேத ேநரைத ைற வழயதா, 2,448 ேபமேம ேத ெபறன. இதனா, அத ேத,ேத ேநரைதஅக, .ஆ.., உதரட. த இ ேதக, ைறத மெபயாசேதா அைடத ேதவக, "ேத, சயான மெப வழகைல'என , .ஆ.., அவலக , ெதாடயாக, ேபாராட நடன. கடத ஆ, ஆக, 25,.இ.., றாவ ேத நடத. இ, 27 ஆர ேப ேதவான. ஆனா, ேத எயவக, இட ஒடாளகசைக ேவ என ேகாரப, அவக, மெப,ஐ சதத சைக அ, அர உதரட. அதப, ேதவானவக, ள 2 மெப கணஎ ெகாளப, அத அபைட மெப சைக அகபடதா, அ, 45ஆர ேமபேடா, ேத அைடளன. இவககான, சாத சபா ப,மால வ, ேந வய.

    500 ேப : தழக, 32 மாவடக, ெசைன, மைர, , ேசல, தசாஆய,ஐ மடலகளாக கப, சாத சபா நடற. "ஒெவா மடல, ன,500 ேப த, சா சபா அைழகபவ. ஒ மாத ேமலாக, இப நட' என, .ஆ.., வடார ெதள. இைல, ".இ.., ேத மெபைண ம கண ெகா, ப யமன ெசயேவ. இதர க தககாக அகபசைக மெபைண கண ெகாளடா. சைக மெப அ அரஉதரைவ, ரெசய உதரடேவ' என, வ, ெசைன உயமற வழ ெதாடரபட.

    தயானவகைள ேதெதப ல ளபகைளஎ, மைர ஐேகா ைள,சப வழ ெதாடரபள. இ, சபதபட ைற அகாக, ப ம தாக ெசயஉதரடப, ரசரபா, "வழ இ ைப ெபாேத, ப யமன இ'என, ெத உளா. இதனா, ட ேபாராடக , ேத ெப, சாத சபாபேகறா, ேவைலைடமா, ைடகாதா என, ெதயாம, ேதவக கலக அைடளன.

    ஒன்னுமே புரியல உலகத்துல. ...

    என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது....

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் நீங்கள் நிறைய எழுதி இருக்கிறீர்கள் ஆனால் உங்கள் font சரியில்லை. நீங்கள் எழுதுவதெல்லாம் இப்படித்தான் இருக்கிறது.

      சீன வலைதளத்திற்கு வந்துவிட்டோமா என்ற நினைப்பு தோன்றுகிறது.

      Delete
    2. தோன்றனுமுல்ல. தமிழில் மட்டுமல்ல நமது குமுறல்கள் பல மொழிகளிலும் வெளிப்படுத்தினாலாவது விடியல் வராதான்னு தான் சீன மொழியை கையாண்டோம். தொடர்ந்து படியுங்கள் ஆப்பிரிக்கன் மொழியிலும் முயற்சி மேற்கொள்வோம்.

      Delete
    3. அரசாங்கத்துக்கு நன்றி சொல்லுங்கள்.

      உங்களை சீனம், ஆப்ரிகன் மொழிகளையெல்லாம் கற்றுக்கொள்ள வைத்து விட்டார்களே!

      Delete
  5. KANNAN SUBRAMANI SIR
    Unga cmt
    ஒன்னுமே புரியல உலகத்துல. ...என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..

    ReplyDelete
  6. ithu enna kodumai.. ethuku ippadi eluthadikiranga. april 10 varaikum enna pannaporanga.. yenda b.ed padichonu iruku.

    ReplyDelete
  7. paper 2 cv mudichitu adutha velaya pakalamna ipdi pandrangale.. cha.. ithanalaye BP vanthudum pola. mental torture ah iruku

    ReplyDelete
  8. 2012 tet la 1 mark venum. Oru case poda yaaravathu vareengala??????

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. hai friend plz tell anyone there is any chance to get job.
    Paper 2 physics BC 72 wt. (tamil medium).

    ReplyDelete
  11. maniyarasan sir ia m paper 1 wt 79 sc chance for me?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி