சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் இன்று (மார்ச் 5) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை ரூ.50 செலுத்திப்பெற்றுக்கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பட்டதாரி ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், இரண்டாம் தாள் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
biochemistry candidate eligible to write this exam?
ReplyDeletebiochemistry candidate eligible to write this exam?
ReplyDelete