போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2014

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்.


தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் நடத்திய, அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோஜாக்), கடந்த, பிப்., 26 மற்றும் மார்ச் 6ம் தேதிகளில், அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்."இதில் ஈடுபட்டவர்களின், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்" என தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்தது. தேர்தல் வருவதால் அரசு இந்த நடவடிக்கையை வாபஸ் பெறும் என தொடக்க கல்வி ஆசிரியர்கள் நம்பினர்.

ஆனால், சம்பளம் பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை, தொடக்க கல்வி இயக்குனரகம் எடுத்து வருகிறது.இதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர், பணிபுரியும் ஒன்றியம், மாவட்டம், அவரது சம்பளத் தொகை, பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சான்றுகளை சமர்ப்பிக்க உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி