TET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2014

TET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும்.


சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால்
மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் இவர்களுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் இருந்தது.இந்த நிலையில், பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மண்டல மையங்கள்: ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெறும் மாவட்டங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையங்களின் விவரம்:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,மதுரை - எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் எதிரில், மதுரை -20. தொலைபேசி எண்: 0452-2531754.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி - ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதி, திருச்சி -01. தொலைபேசி எண்: 0431-2416648.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி - சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலை, சேலம் -7. தொலைபேசி எண்: 0427-2412160.

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் - ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் பஸ் நிலையம் அருகில், கும்பகோணம். தொலைபேசி எண்: 0435-2431566.

சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 319, ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை,சென்னை - 44. தொலைபேசி எண்: 044-22417714.

9 comments:

  1. Anonymous mem my email id : ben10ultimate2014@gmail.com

    plz send ur mail id.

    ReplyDelete
  2. kalvi seithi vasaga nanparkalae..today unga yarukavathu birthday va?my wishes..HAPPY BIRTHDAY...

    ReplyDelete
  3. Paper 2 candidateskum, indha five placesla than cv nadakuma? Illa district wise nadakuma? Pls anybody reply.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி