ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2014

ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை வழங்க உத்தரவு.


தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசுப்பள்ளிகள் 36 ஆயிரத்து 813, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 8 ஆயிரத்து 395, சுயநிதிப்பள்ளிகள், 11,365 உள்ளன. இதில் மொத்தமாக 56,573 பள்ளிகள் உள்ளன.இதில் பணியாற்றும் ஆசிரியர்கள் 56 ஆயிரம் பேர் உள்ளனர். மொத்தமாக மாணவர்கள் 1.35 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் போட்டோவுடன் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.கடந்த ஆண்டுகளில் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே அடையாள அட்டையில் இடம் பெற்றிருந்தது.

தற்போது புதியதாக வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. The Maths trb coaching centre in Erode (MPC TRB Coaching Centre) who produced maths pg candidate in pg trb 2013 (My no is 13PG12030019) will start their next year pg trb coaching from 16.03.14.Admission going on contact: 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி