TNPSC :மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

TNPSC :மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி.


நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜூன் 8-ம் தேதி நடக்கிறது.
மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 9 காலியிடங்களும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கு 2 காலியிடங்களும் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி. தகவல் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி கடந்த 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. டி.இ.ஓ. தேர்வுக்கு சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள்.

முதல்நிலைத் தேர்வு டி.இ.ஓ. தேர்வு என்பது முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு என இரு நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 550 பேர் தேர்வு செய்யப் படுவர். மெயின் தேர்வில் 2 பொதுஅறிவு தாள்களும் (தலா 300 மதிப்பெண்) கொள்குறி வகையிலான கல்வியியல் தாளும் (300 மதிப்பெண்) இடம் பெறும். இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்புகிடைக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி