இலங்கையிடம் தோல்வி: யுவராஜ் சிங் வீடு மீது ரசிகர்கள் தாக்குதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2014

இலங்கையிடம் தோல்வி: யுவராஜ் சிங் வீடு மீது ரசிகர்கள் தாக்குதல்!

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வி அடைந்ததற்கு மந்தமாக ஆடிய யுவராஜ் சிங்தான் காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டிய நிலையில், சண்டிகரில் உள்ள அவரது வீடு மீது தாக்குதல் நடந்துள்ளது.


நேற்று நடைபெற்ற  நேற்று நடைபெற்ற 20 ஒவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெறும் 130 ரன்களுடன் சுருண்டது.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய யுவராஜ் சிங், 21 பந்துகளை விழுங்கி, வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் சிங்தான் காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.


            

இந்நிலையில் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தால் கோபமடைந்த ரசிகர்களில் சிலர், நேற்று இரவு சண்டிகரில் உள்ள அவரது வீடு மோது கல்வீசி தாக்கினர். இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து யுவராஜ் சிங்கின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸ் ரோந்துவாகனம் ஒன்றும் யுவராஜ் சிங் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

மூன்று கார்களில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் கும்பல் ஒன்று யுவராஜ் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே தோல்விக்கு தனது மகனை மட்டுமே குற்றம் சொல்லக்கூடாது என்றும், வாழ்க்கையைப்போன்றே விளையாட்டுகளிலும் வெற்றி தோல்வி சகஜம் என்றும் யுவராஜ் சிங்கின் தந்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய கேப்டன் தோனியும் யுவராஜ் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் தன்னால் முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சித்தார். கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில் தனி ஒரு குறிப்பிட்ட நபரை குற்றம் சாட்டுவதில் எந்த பயனும் இல்லை.மோசமான கிரிக்கெட் ஆடவேண்டும் என்று எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் விரும்புவதில்லை .யுவராஜ் சிங்கை பொறுத்தவரை அது அவருக்கான நாள் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி