யுவியின் தொய்வு-இந்தியாவின் தோல்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2014

யுவியின் தொய்வு-இந்தியாவின் தோல்வி

நேற்று மாலை  கல்வி செய்தியிக்கு visitor களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.காரணம்  T-20 உலகக் கோப்பையின் இறுதியுத்தம்.


சமீபகாலமாக ஆசிய கோப்பை, நியிசிலாந்து,வெஸ்ட் இண்டீஸ்,தென்னாபிரிக்கா என தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த இந்திய அணி T-20 உலக கோப்பையில் இறுதி வரை முன்னேறியது இந்தியர்களிடம் இன்பத்தை உண்டாக்கியது.

ஆனால்ஆஸ்திரேலியா,தென்னாபிரிக்கா,பாகிஸ்தான் என அனைத்தையும் பந்தாடிய இந்திய அணி இறுதி போட்டியில் இலங்கையிடம் பந்தையே அடிக்கவில்லை.(விராட் ஐ தவிர)

 15 வது ஓவரில் யுவி விளையாடும் போது இந்தியாவே வெருப்படைந்தது.மறுமுனையில் விராட் அருமையாக விளையாடி கொண்டிருக்கும் போது யுவி single rotate பண்ணவே தடுமாறினார்.

                                   

run chasing என்று இருந்தால் கூட விக்கட் விழ கூடாது என்ற காரணத்திற்காக நிதானத்தை கைப்பிடித்து இருக்கலாம். ஆனால் first batting இல் கையில் 8 விக்கட்டை வைத்து கொண்டு இப்படி ஒரு ஆமை வேக ஆட்டத்திற்கு அவசியமில்லை.

 எனது கடையில் ups வசதியோடு கூடிய dth வசதி இருப்பதால், மின் தடையின் காரணமாக பலர் என் கடையில் தொலைக்காட்சி பார்த்தனர்.

பொதுவாக சிக்சர்,பவுண்டரி அடிக்கும் போது கைதட்டல் வாங்கும் யுவி,  இந்த முறை அவுட் ஆன போது அதைவிடவும் பலமாக கைதட்டல் வாங்கினார்.

அனைத்து உலக கோப்பையிலும் ஹீரோ வாக ஜொலித்த யுவி இந்த உலகக் கோப்பையில் வில்லன் வேடம் ஏற்று கொண்டது ஏனோ?

அன்புடன்
மணியரசன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி