22–ந் தேதி கடைசி நாளில் தேர்தல் பிரசார நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2014

22–ந் தேதி கடைசி நாளில் தேர்தல் பிரசார நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு.


தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ளதால் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.வருகிற 22–ந் தேதியுடன் பிரசாரம் ஓய்கிறது.

வழக்கமாக பிரசாரம் நிறைவு நாளில் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும். ஆனால், இந்த முறை 22–ந் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் கூறுகையில்,‘‘ஓட்டுபதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரம் நிறைவு பெற வேண்டும் என்ற விதியின்படி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி