கல்வியாண்டு துவக்கத்திலேயே பஸ் பாஸ் கிடைக்க உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2014

கல்வியாண்டு துவக்கத்திலேயே பஸ் பாஸ் கிடைக்க உத்தரவு!


கல்வியாண்டு துவக்கத்திலேயே, மாணவர்களுக்கு பஸ் பாஸ் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க, பள்ளி நிர்வாகத்தினருக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக, மாநில அரசு மூலம், பள்ளிக் கல்வி துறை சார்பில், ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.இந்த கல்வியாண்டில், பள்ளி திறந்த முதல் நாளன்றே, மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கவேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் இதற்கான பணிகளில் ஈடுபட பள்ளி ஆசிரியர்கள் மே மாதம் பள்ளிக்கு வர வேண்டிய நிலையில் உள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயிலுகின்றனர். இதில், 80சதவிகிதத்தினர், கிராம பகுதிகள், தொலைதூர பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள்தான். பள்ளி திறக்கப்படும் ஜூன் 2ம் தேதியன்று, பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்னும் உத்தரவின்படி, ஆசிரியர்கள், பள்ளியின் இறுதி வேலை நாளான்று, பாஸ் தேவைப்படும் மாணவர்களின் பட்டியலை தயார்படுத்தி உள்ளனர்.

உடுமலை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இந்த கல்வியாண்டின் துவக்கத்திலேயே, மாணவர்களுக்கு பாஸ் வழங்க வேண்டியுள்ளதால், புகைப்படம் சரிபார்த்தல், பஸ் பயணம் செய்யும் பகுதிகளை சரிப்பார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, ஆசிரியர்கள், மே மாதம் வர வேண்டியுள்ளது. பஸ் பாஸ் வேண்டியுள்ள மாணவர்களின் விவரங்களை, பள்ளியின் இறுதி நாளன்று சரிபார்த்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.உடுமலை சுற்றுப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கல்வி பயிலுகின்றனர். இதில் 80சதவிகிதத்தினர், கிராம பகுதிகள் மற்றும் தொலை தூர பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள்தான். பள்ளி திறக்கப்படும் ஜூன் 2ம் தேதியன்று, பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்னும் உத்தரவின்படி, ஆசிரியர்கள், பள்ளியின் இறுதி வேலை நாளன்று, பாஸ் தேவைப்படும் மாணவர்களின் பட்டியலை தயார்படுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி