பள்ளி ஆண்டு விழாவுக்கு அமைச்சரை அழைத்த பள்ளி நிர்வாகி மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் ஒரு தனியார் பள்ளியின் ஆண்டு விழா கடந்த 31ம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி கலந்து கொள்வதாக இருந்தது. இதனையொட்டி அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் வகையில் அதிமுக கட்சிக்கொடிகளுடன் தோரணமும், சின்னம் பொறிக்கப்பட்ட பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் வீரமணி விழாவில் பங்கேற்கவில்லை.கட்சிக்கொடிகள், சின்னங்கள் பொறித்த பேனர்கள் வைத்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும். இதுதொடர்பாக ஜோலார்பேட்டை விஏஒ மஸ்தான் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகி ராஜேஸ்வரி, அவரது மகள் ரேகா ஆகியோர் மீது தேர்தல் விதிமுறை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி