பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி மும்முரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2014

பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி மும்முரம்.


கரூர்: க.பரமத்தி பஞ்.யூனியனில்,அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் க.பரமத்தி பஞ். யூனியனில், 6 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவதற்காக குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணி, 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதற்கான பணியில், ஆசிரியர், பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பள்ளி செல்லா குழந்தைகள் எவரும், தங்களது பகுதிகளில் இருப்பதை கண்டறிந்தால், பஞ். தலைவர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்.அப்படி பள்ளி செல்லா குழந்தைகள் என கண்டறியப்பட்டால், அவர்களை, பள்ளியில் சேர்ப்பற்கான நடவடிக்கை அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த பணி, அடுத்த மாதம் 20ம்தேதி வரை நடைபெறும். இத்தகவலை, க.பரமத்தி வட்டாரவள மைய மேற்பார்வையாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி