இடைநிலை ஆசிரியர் பயிற்சி: தேர்வு அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2014

இடைநிலை ஆசிரியர் பயிற்சி: தேர்வு அட்டவணை வெளியீடு.


இடைநிலை ஆசிரியர் பயிற்சிக் கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் 2-ம் ஆண்டு மாணவர்க ளுக்கான தேர்வு ஜூன் 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரையும், முதலாவது ஆண்டு மாணவர் களுக்குஜூன் 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையும் நடைபெறும். தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

தேர்வுக்காலஅட்டவணை வருமாறு: இரண்டாம் ஆண்டு ஜூன் 11 (புதன்) இந்திய கல்வி முறை ஜூன் 12 (வியாழன்) கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2 ஜூன் 13 (வெள்ளி) மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)-2, இளஞ்சிறார் கல்வி-2 ஜூன் 14 (சனி) ஆங்கில மொழிக்கல்வி-2 ஜூன் 16 (திங்கள்) கணித வியல் கல்வி-2 ஜூன் 17 (செவ்வாய்) அறிவியல் கல்வி-2 ஜூன் 18 (புதன்) சமூக அறிவியல் கல்வி-2 முதலாம் ஆண்டு ஜூன் 20 (வெள்ளி) கற்கும் குழந்தை ஜூன் 21 (சனி) கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத் துதலும்-1 ஜூன் 23 (திங்கள்) மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)-1, இளஞ்சிறார் கல்வி-1 ஜூன் 24 (செவ்வாய்) ஆங்கில மொழிக்கல்வி-1 ஜூன் 25 (புதன்) கணிதவியல் கல்வி-1 ஜூன் 26 (வியாழன்) அறிவியல் கல்வி-1ஜூன் 27 (வெள்ளி) சமூக அறிவியல் கல்வி-1 இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி