தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு பொறியியல் கல்லூரி கூட, 2013 - 14ம் கல்வியாண்டில், முதல் செமஸ்டரில், 90%க்கும் மேற்பட்ட தேர்ச்சி சதவீதத்தை அடையவில்லை என்று தெரியவந்துள்ளது.
தனியான அளவில், ஒரு மாணவர்கூட, 56 கல்லூரிகளில், முதல் செமஸ்டரில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியடையவில்லை என்பதும் இன்னொரு அதிர்ச்சி தகவல்.சமீபத்தில் வெளியிடப்பட்ட, பொறியியல் கல்லூரிகளின் முதல் செமஸ்டர் முடிவுகளின்படி, அதிகபட்சமாக பெறப்பட்ட தேர்ச்சி விகிதம் 87.45%. RMD பொறியியல் கல்லூரி இந்த தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. முதல் 5இடங்களில், சென்னையை சாராத 3 கல்லூரிகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு, 25வது தரநிலைக்கும் குறைவாக இருந்த திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, இந்தாண்டு, 86.07% பெற்று, அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற கல்லூரிகளில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. அதனையடுத்து, சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி 83.76% தேர்ச்சியுடன் மூன்றாமிடம் பெறுகிறது.திருச்சியின், சாரநாதன் பொறியியல் கல்லூரி, 83.21% தேர்ச்சியுடன், நான்காம் இடத்தையும், ராஜபாளையத்திலுள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 82.82% மதிப்பெண்களுடன் ஐந்தாமிடத்தைப் பெறுகிறது.அதேசமயம், மாணவர்கள் பெற்றிருக்கும் இந்த மதிப்பெண்களை வைத்து மட்டும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பிட்டுவிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி