ஆங்கில வழிக் கல்வி திட்டம்; களமிறங்கும் அரசு பள்ளிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2014

ஆங்கில வழிக் கல்வி திட்டம்; களமிறங்கும் அரசு பள்ளிகள்


ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், இந்த மாதம் முதல், சேர்க்கையை நடத்த அரசு பள்ளிகள் தயாராகி வருகின்றன.
கடந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில்,ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ஆறாம் வகுப்பும் தொடங்கப்பட்டது.ஒன்றியம் வாரியாக 50 சதவீத பள்ளிகள், ஆங்கில வழி கல்வியை ஆரம்பித்து கொள்ளலாம். பெரும்பாலான பள்ளிகள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

தனியார் மெட்ரிக்., பள்ளிகள், ஏப்ரல், மே மாதமே, மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விடுகின்றன. ஆனால்,கடந்த ஆண்டு அரசு பள்ளிகள், ஜூனில் தான் சேர்க்கையை நடத்தின. 40 மாணவர்கள் சேர வேண்டிய, பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை இருந்தது. வேறு வழியின்றி, தமிழ் வழி கல்வி பயில வந்த மாணவர்கள், ஆங்கில வழி கல்வியில்,வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். இதனால், இந்த ஆண்டு, தற்போதே ஆங்கில வழி கல்வியில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கேற்ப, பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு சேர்க்கை நடப்பதாக, தற்போதே அறிவிப்பு செய்து வருகின்றனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி