ஆசிரியர், அரசு ஊழியர்கள் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டுகோள்: தீக்கதிர் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2014

ஆசிரியர், அரசு ஊழியர்கள் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டுகோள்: தீக்கதிர் செய்தி


நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில், அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் மற்றும்அவர்தம் குடும்பத்தினர் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும்
என்று அரசுஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து தனியாக தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்திருப்பது இது முதல் முறையாகும் அரசுஊழியர் ஆசிரியர்களின் முதன்மையான கோரிக்கை புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து , ஏற்கெனவே அமலில் உள்ள வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும் என்பதே ஆகும். பாரதிய ஜனதா தலைமையில் இருந்த மத்திய அரசு இந்ததிட்டத்தை, 2001-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தியபோதே, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பத்தடிபாயும் என்பதற்கிணங்க அன்றுதமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அண்ணா திமுக அரசு, 01-04-2003 முதல் அமல்படுத்தியது. அது மட்டு மல்லாமல் அரசுஊழியர்களின் ஓய்வூதிய கால உரிமைகள் மீது கையை வைத்தது. இதற்கெதிராக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கிளர்ந் தெழுந்து போராடியது வரலாற்று நிகழ்வாகும். அந்த நேரத்தில் 1,70,000 அரசுஊழியர்களைஅண்ணா திமுக அரசு டிஸ்மிஸ் செய்தது. பணியில் சேர்க்க மறுத்தது.அரசுஊழியர்கள் தத்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில், சிஐடியு சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் டி.கே. ரங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக, தமிழ்நாடு அரசு, டிஸ்மிஸ்செய்த அரசுஊழியர்களை, ஆசிரியர்களை பணியில் சேர்க்க வேண்டியதாயிற்று. அதை தொடர்ந்து நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று வந்ததிமுக அண்ணா திமுக அரசு அமல்படுத் திய புதிய பென்சன் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தியது. அது மட்டுமல்லாமல் மன்மோகன் சிங் அரசில் அங்கம் வகித்ததிமுக புதிய பென்சன் திட் டத்தை அமல்படுத்திய போது வேடிக்கை பார்த்தது.

புதிய பென்சன் திட்டத்தை அமல் படுத்த, பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசும், காங்கிரஸ் தலைமை யிலான அரசும் முனைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த வேலையில், இதற்கெதிராக இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில். தொடர்ந்து எதிர்த்து குரல் எழுப்பி வந்தனர். இதன் காரணமாக 10 ஆண்டு காலமாக புதிய பென்சன் திட்டம் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. இறுதியாக சென்ற ஆண்டு பாரதிய ஜனதாவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்றிய அவலம் நடந்தேறியது.அண்ணா திமுக கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் வெற்றி பெற்று வந்தால், தமிழ் நாட்டில் புதிய பென்சன் திட்டத்தை மறு பறுசீலனை செய்வேன் என்று கொடுத்த வாக்குறுதி மூன்று ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.காங்கிரஸ், பாரதிய ஜனதா, திமுக,அண்ணாதிமுக இந்த நான்குகட்சிகளும் அரசுஊழியர் ஆசிரியர்களின் பென் சனுக்கு வேட்டு வைத்த கட்சிகள்.

இன்றை தேர்தல் களத்தில், இந்த நான்கு கட்சிகள் தனித் தனியாகவும், அவைகளை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.அரசு ஊழியர்களின் பென்சனை கடைசிவரை பாதுகாக்க போராடிய, குரல் கொடுத்த இடது சாரிகளுக்கு வாக்களிக்க இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன் படுத்திக்கொண்டு இடதுசாரிகள் நிற்கும் 18 தொகுதிகளிலும் இலட்ச கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர் தம் குடும்பத்தினர் என தமிழகத்தில் இடது சாரிகளுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

2 comments:

  1. YES. I REQUEST ALL TO VOTE FOR COMMUNIST FOR OUR BETTER FUTURE.

    ReplyDelete
  2. சரியான முடிவு - புதிய பென்சன் திட்டத்தை பொறுத்தவரை மத்தியில் காங்கிரஸ், பிஜேபி மாநிலத்தில் அதிமுக, திமுக இந்த கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. தொழிலாளர் விரோத புதிய பென்சன் திட்த்திற்கு அமோக ஆதரவு தந்த கட்சிகள்தான் இவை. இதன் தொடக்கம் முதலே புதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக வலுவாக குரல் கொடுத்ததும், வீதியில் இறங்கி போராடியதும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், அவர்களது தொழிற்சங்கங்களும்தான்…….
    தமிழ்நாட்டில் அரசுத்துறையில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்க அரசு அலுவலகங்களில் தொகுப்பூததியம், மதிப்பூதியம், தர ஊதியம் என வழங்கி பல ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தாமல் அல்லாட விடுவது மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கே ஆகும். இதனை எதிர்த்து இன்று வரை வீதியில் இறங்கி போராடுவது இடதுசாரி தொழிற்சங்கங்களே…. தொழிலாளர் உரிமையைப் பற்றி நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் வலுவாக குரல் எழுப்புவதும் இடதுசாரிகள் மட்டுமே.
    இந்தியாவில் நாளுக்கொரு விலையேற்றம் உள்ள சூழலில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 10,000 வழங்க வேண்டுமென்று (சிஐடியு) குரல் கொடுப்பதும், தொழிலாளர் உரிமைச் சட்டங்களை இன்று வரை காப்பாற்றி வருபவர்களும் இடதுசாரிகளே.
    ஆகவே இத்தேர்தலில் இடதுசாரிகள் பலவீணமடைந்தால் நட்டம் இடதுசாரிகளுக்கில்லை, மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும்தான்……. ஆகவே கடந்தகால வரலாற்றை திரும்பி பார்த்து, உங்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, சிந்தித்து வாக்களிப்பீர், இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வீர்………

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி