சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு : சிறப்பு ஆசிரியர்களுக்கு குறி வைக்கும் அ.தி.மு.க., DINAMALAR NEWS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2014

சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு : சிறப்பு ஆசிரியர்களுக்கு குறி வைக்கும் அ.தி.மு.க., DINAMALAR NEWS


சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், கம்ப்யூட்டர், உடற்கல்வி பயிற்றுவிக்க, 16,548 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், மாதம், 5,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. வாரத்தில், மூன்று நாள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டு முடிந்த நிலையில், சம்பளம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி, பகுதி நேர ஆசிரியர்கள், சங்கம் அமைத்து, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களை, அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர்கணக்கெடுத்து உள்ளனர். ஓட்டு சேகரிக்க, அவர்களின் வீடுகளுக்கு செல்லும் அ.தி.மு.க.,வினர், "லோக்சபா தேர்தலுக்கு பின், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படும்; அதன்பின், பணி நிரந்தரம் செய்யப்படும்' எனக் கூறி வருகின்றனர்.

இதற்காக, வரும் லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சி வேட்பாளரை, பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளோர், அவர்களை சார்ந்தோர் ஆதரிக்க வேண்டும் என, கோரிவருகின்றனர். மேலும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு பணிக்காக காத்திருக்கும், 55 ஆயிரம் பேருக்கும், அரசு வேலை வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க.,வினர் உறுதி அளித்து வருகின்றனர்.

18 comments:

  1. TET EXAM ezhuthi therchi petravangaluke oruvarushama THIRUNELVELI ALWA kooduthu irrukanga.
    IVANGALUK (SPECIAL TEACHERS)ku Nichayam SPECIAL THIRUPATHI LADDU kidaikum.

    ReplyDelete
  2. NETRU TET CASE DETAIL KALVI SEITHIYALAR SIR MARANTHUVITIRGALA UNGAL SETHIYAI NAANGAL ETHIRPARKIROM PLZ INFORM REGULARLY SIR.
    FRIENDS NETRU CASE detail yaarukavathu therinjaa plz inform pannunga therinjikalam.

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய வழக்குகள் அனைத்தும் 11 தேதிக்கு ஒத்திவைக்கபட்டன...

      Delete
    2. இதே வேலையாக போச்சு . என்று இந்த தொடர் கதைக்கு முற்று புள்ளி வரும் ??????

      Delete
    3. KANNI THIVU kathaiyae minjum TET Episode in the COURT...........!!!!!!!

      Delete
    4. Boss., ippodhaikku posting poda poradhilla....
      so private school better nu thonudhu.... enna naan solvadhu sariyaa?
      Language tamil teachers private school la eduppaangala?

      Delete
    5. 2012 ல் பாஸ் செய்தவர்கள் உடனே job க்கு சென்று விட்டார்கள் .நம் பாடு தான் இப்ப டி

      Delete
  3. Tet pass pannuna ellarukum vealai keadaikuma

    ReplyDelete
  4. NAMBATHINGA basss....MLA election la kodutha vakuruthiyai S. G tr ku innum niravetravillai. NAMBATHINGA BASSS.....nambathinga.ellam kolla kuta thalaivanunga....

    ReplyDelete
  5. Private school LA TET pass pannvangala appointment pannuraangala.therinjavanga sollunga?

    ReplyDelete
  6. wgt குறைவு என்னில் appointment செய்கிறார்கள்.

    ReplyDelete
  7. Madam my weitage 75 BC but major Tamil ippo naan enna seiya... private school la eduthupaangala....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உங்களின் பிறந்த தேதி ?

      Delete
    3. 31/05/1982 ..... sathish sir.... ivlo naal company poyitu irundhaen ...vaelaiya vittu oru varusam mudindhuvittadhu.... romba gethha versa TET pass nu sollitaen.... marupadiyum company pona ? So adhanaala thaan private school pogalaam ..neenga enna solringa sir?
      Private school evlo salary kodupaanga?

      Delete
    4. Govement Job Sure ah Kidaikum Sir...

      Delete
  8. sir nanum tet pass wait paren. now g4 pass athulayavathu posting kedaikuthanu papom.now one doubt first open cotta fill pannittu than cotta fill pannuvanga but now openla 190bal irukkum pothu communalukunu othukkuna post a fill panranrga .ithu sariya sollunga plz

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி