பி.எட். தேர்வு எழுத அனுமதி கேட்டு 100 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

பி.எட். தேர்வு எழுத அனுமதி கேட்டு 100 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு.


பி.எட். தேர்வு எழுத அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் ஸ்ரீராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. 2006ல் இந்தக் கல்லூரி துவங்கப்பட்டது. கடந்த ஆண்டில் இந்தக் கல்லூரியில் பி.எட். படிப்பில் சேர்ந்த ரகுராமன், அஞ்சலி உள்ளிட்ட 100 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:நாங்கள், கடந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்தோம். தொடர்ந்து வகுப்புகளுக்கு வருகை தருகிறோம். இந்தக் கல்லூரிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை வாபஸ் பெறுவதாக, கடந்த ஆண்டு ஜூனில் பெங்களூருவில் உள்ள ஆசிரியர் கல்விக்கான தென்மண்டல தேசிய கவுன்சில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, டில்லியில் உள்ள தலைமைஅலுவலகத்துக்கு கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்தது. இந்தப் பிரச்னையை, தென்மண்டலகவுன்சிலுக்கு அனுப்பி வைத்து, அதுவரை அங்கீகாரம் வாபஸ் உத்தரவை நிறுத்தி வைத்தது.கடந்த, ஜனவரியில் மீண்டும் அங்கீகாரம் வாபஸ் பெறுவதாக தென்மண்டல கவுன்சில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், இம்மாதம் 30ம் தேதி பி.எட். தேர்வு துவங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டு விட்டது. எங்களுக்கு ஹால் டிக்கெட் தர முடியாது என பல்கலைகழகம் தரப்பில் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. வரும் 30ம் தேதி துவங்க இருக்கும் பி.எட். தேர்வு எழுத எங்களை அனுமதிக்கும்படி ஆசிரியர் கல்வி பல்கலைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை இம்மாதம் 28ம் தேதிக்கு நீதிபதி சுந்தரேஷ் தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி