அரசுப் பள்ளிகளில் சாதித்த மாணவர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

அரசுப் பள்ளிகளில் சாதித்த மாணவர்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்துமாவட்ட அளவில் முதல் 3 இடங்களை 6 பேர் பெற்று சாதனை படைத்தனர்.
இம் மாவட்டத்தில் 212 அரசுப் பள்ளிகள், 11 நகராட்சிப் பள்ளிகள், 17 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகள், 6 சமூகநலத் துறை பள்ளி என மொத்தம் 246 அரசுப் பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே. ரம்யா 500-க்கும் 493 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 97, கணக்கு 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி எம். விஜயலட்சுமி தமிழ் 94, ஆங்கிலம் 98, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 என மொத்தம் 492 மதிப்பெண் பெற்று 2-ஆம் இடத்தைப் பெற்றார். இவருடன்உத்தரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். தாரணி தமிழ் 97, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 97 மற்றும் வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிவி. ரேஷ்மா தமிழ் 98, ஆங்கிலம் 96, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 99 ஆகிய 3 மாணவிகளும் 492 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பிடித்தனர்.திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் கே. சதீஷ்குமார் தமிழ் 96, ஆங்கிலம் 96, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 மதிப்பெண்களும், ஏகானாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். சரண்யா தமிழ் 95, ஆங்கிலம் 98, கணக்கு 100,அறிவியல் 100, சமூக அறிவியல் 98 மதிப்பெண்கள் என இருவரும் தலா 491 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடம் பெற்றனர்.அரசுப் பள்ளிகள் அளவில் சாதித்த மாணவர்களுக்கு ஆட்சியர் கா. பாஸ்கரன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். மேலும் மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் சாந்தி, கல்வி அலுவலர்கள் தியாகராஜன், வேதாசலம் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

3 comments:

  1. நானும் பாராட்டுகிறேன்.வாழ்க செல்வங்கள்.

    ReplyDelete
  2. நீங்களே உண்மையான பெருமைக்கும் புகழுக்கும் உடையவர்கள்.
    ்வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்.......

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி