நாளை காலை +2 தேர்வு முடிவு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2014

நாளை காலை +2 தேர்வு முடிவு...






பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறையின், நான்கு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. 8.26 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச், 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. 2,242 மையங்களில் நடந்த தேர்வை, 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

இதன் முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது. தேர்வுத் துறையின், நான்கு இணையதளங்களில், தேர்வு முடிவு வெளியிடப்படுவது உடன், நூலகங்கள், அந்தந்த பள்ளிகளிலும், தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்க, பதிவு எண்
களுடன், பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, 88.1 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டும், இதே அளவிற்கோ அல்லது 2 சதவீதம் கூடுதலாகவோ தேர்ச்சி இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in / www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in / www.dge3.tn.nic.i

பி.எஸ்.என்.எல்., சேவை : பி.எஸ்.என்.எல்., மொபைல் சந்தாதாரர்கள், தங்கள் மொபைல்போனில், தேர்வு முடிவை அறியலாம். இதற்கான வசதியை, பி.எஸ்.என்.எல்., செய்துள்ளது. இதற்கு, நேற்றில் இருந்தே, பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, HSC / REGISTOR NO ஆகியவற்றை பதிவு செய்து, 53576 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், தேர்வு முடிவு அறிவிக்கப்படும். பதிவு செய்ய கட்டணம் இல்லை. தேர்வு முடிவை தெரிவிக்கும் சேவைக்கு, மூன்று ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என, பி.எஸ்.என்.எல்.,
அறிவித்துள்ளது.

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அனைத்து +2 மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் .

    ReplyDelete
  3. இன்று சான்றிதல் சரிபார்பிர்க்கு செல்பவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பர்களே....

    ReplyDelete
    Replies
    1. sri sir pg relateda dinamalar-la vandha news unmaiya. yarum board munadi poratam panom. vibu naiyer sonatha comment ethume varalaye sir.

      Delete
    2. சார் .. PG பற்றியோ அல்லது டெட் பற்றியோ எந்த ஒரு செய்தியும் இன்று வரவில்லை....இன்னும் இரண்டு நாட்களுக்கு +2 தகவல்கள் தான் அதிகமாக இடம்பெறும்...

      Delete
  4. அனைத்து +2 மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். by JOW - SAM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி