450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2014

450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி...


நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், '21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும்.
நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிஅமைக்கும்' என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரெஞ்சு கணிப்பாளர்,தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் டி நாம்ஸ்ட்ரடாமஸ். 1500களில் வாழ்ந்த இவர், எதிர்காலத்தில் நடக்க விருப்பதை தன் யூகத்தால் கணித்து முன்கூட்டியே எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நாம்ஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய, 'தி புரோபெசீஸ்' என்ற புத்தகத்தில், உலகில் பல நாடுகளிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி முன்கூட்டியே எழுதி வைத்துள்ளார். இந்த புத்தகத்தில் முதல் பதிப்பு, 1555ல் வெளியாகியுள்ளன.

இந்த புத்தகத்தை மகாராஷ்டிராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷி மராத்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து நாம்ஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய அரசியலில், 21ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, பிரெஞ்சு புரட்சி, ஹிட்லர், பல்வேறு அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிய சம்பவங்களும் இவரின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 comments:

  1. This book any idea for tet/trb matter?

    ReplyDelete
    Replies
    1. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

      Delete
    2. Etharkkum Ramachandra joshi nn
      book ll nandraka thedi parkka sollalam

      Delete
    3. என்னயா கேட்கரவன் கேனயனா இருந்தா ? எலி ஏரோபிளேன் ஓட்டும் னு சொல்வீங்க போல இதுவும் மோடி குழுவின் ஏற்பாடுதான். 2014 ல் இந்த கேவலமான விசயத்தை நம்புறீங்களா? அப்டினா அந்த செய்தியின் நகல் காட்ட முடியுமா? எல்லாரும் ஆசிரியர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 450 வருடத்திற்கு முன்பு பா.ஜ.க என்ற கட்சியே கிடையாது. நரேந்திரமோடி என்று ஓரு சிறுபான்மை விரோதி பிறக்கவே இல்லை. அப்படியானால் 2002 ல் நடந்த உலகின் மிகப்பெரிய வன்முறை மோடியால் நடக்கும் என்று சொல்லவில்லையா?

      Delete
  2. Quatrain 50, Century L
    From the peninsula where three
    seas meet,
    Comes the ruler to whom
    Thursday is holy,
    His wisdom and might all nations
    will greet,
    To oppose him in Asia will be
    folly.
    South India is the only peninsula
    in the entire globe where three
    seas meet a point and stretch
    away. The great Hindu leader
    who will wipe out our enemies
    will hence be a south Indian who
    offers worship on Thursdays. It is
    easy to see why Nostradamus
    specifically mentions Thursday as
    the holy day. It is only Hindus
    who consider Thursday sacred.
    Moslems pray on Friday; Jews
    bow before God on Saturday;
    Christians bawl hymns on Sunday
    at church. Nostradamus is
    making it clear here that the
    conqueror will be a Hindu from
    South India. He will bind Asia
    together under his rule.It is also one f his famous lines about india.....

    ReplyDelete
  3. appadiye tet2013 la yarukellam velai kidaikumunu parthu sollunga

    ReplyDelete
    Replies
    1. When he start write about tet exam then only he died

      Delete
  4. என்னயா கேட்கரவன் கேனயனா இருந்தா ? எலி ஏரோபிளேன் ஓட்டும் னு சொல்வீங்க போல இதுவும் மோடி குழுவின் ஏற்பாடுதான். 2014 ல் இந்த கேவலமான விசயத்தை நம்புறீங்களா? அப்டினா அந்த செய்தியின் நகல் காட்ட முடியுமா? எல்லாரும் ஆசிரியர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  5. அப்படியே அடுத்த 2019 பாராளுமன்ற தேர்தல்ல யார் பிரதமரா வருவார்னு சொல்லிட்டா கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பெருமுதலாளிகளுக்கும் செலவாவது மிச்சமாகும். தயவு செய்து அதையும் சொல்லிடுங்க.... திருவாளர்களே.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி