செல்லாத ஓட்டாகிறது தபால் ஓட்டு நகல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2014

செல்லாத ஓட்டாகிறது தபால் ஓட்டு நகல்


தேர்தல் கமிஷன் வழங்கிய தபால் ஓட்டு சீட்டுக்கு பதிலாக, நகல் அனுப்பினால், அந்தஓட்டு, செல்லாத ஓட்டாக கணக்கிடப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: தபால் ஓட்டு போடுவோர், தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள ஓட்டு சீட்டில், தங்கள் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். அதற்கு பதில்,நகல் அனுப்பினால், அது ஏற்றுக் கொள்ளப்படாது.இரண்டு சின்னங்களில், "டிக்' செய்திருந்தால், செல்லாத ஓட்டாக அறிவிக்கப்படும்.தேர்தல் கமிஷன் அனுப்பிய ஓட்டு சீட்டில் உள்ள வரிசை எண்ணும், பணி சான்றிதழில் உள்ள வரிசை எண்ணும், ஒன்றாக இருக்க வேண்டும். தபால் ஓட்டு அனுப்புவோர், அதற்கானபடிவத்தில் கையெழுத்திட்டு, தபால் உறை மீது கையெழுத்திடாமல் இருந்தாலும், அந்த ஓட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் முறையாக நிரப்பப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த ஓட்டு செல்லத்தக்கதாக ஏற்றுக் கொள்ளப்படும். தபால் ஓட்டு, 16ம் தேதி காலை, 8:00 மணிக்குள் வந்தடைய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி