அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி


வட சென்னை ரோட்டரி சங்கம் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்புடன் இணைந்து 300 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க உள்ளது.

விருப்பமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் 9444257308 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளளாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் சேர்க்கப்படுவர்.
இந்தப் பயிற்சித் திட்டம் ஆங்கில ஆசிரியர்களுக்கு மட்டுமில்லாமல், ஆங்கில வழியில் பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உரியது என இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்பின் தேசிய செயலாளர் கே.இளங்கோ கூறியுள்ளார்.

மொத்தம் 30 மணி நேரம் கொண்ட இந்தப் பயிற்சி, வரும் ஜூன் மாதத்தில் அளிக்கப்பட உள்ளது. கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவை குறித்தும், சொல், இலக்கணம் சார்ந்த மொழித் திறன்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி