தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே தரும்- தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2014

தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே தரும்- தினகரன்


தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே தரும் என்று பள்ளிகள் சங்கத்தினரிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை உறுதி அளித்துள்ளார்.


2013-14-ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை 3 மாதத்துக்குள் அளிக்கபடும் என்றும் பிச்சை தெரிவித்துள்ளார். ஏழை மாணவர் கல்வி கட்டணத்தை மத்திய அரசு தராவிட்டாலும், தமிழக அரசு தர முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களை சேர்க்குமாறும் மெட்ரிக் பள்ளி இயக்குநர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார். 

இயக்குநரின் முடிவு பற்றி மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் ஆலோசித்து முடிவெடுக்கும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குநரை சந்தித்த பின் தனியார் பள்ளிகள் சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி