ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2014

ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல்.


மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய ஆசிரியர் நியமனத்தை, குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற முடியாத நிலைமை, சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு தேர்வை நடத்தினால், அது தொடர்பாக, பல வழக்குகள், நீதிமன்றங்களில் தொடரப்படுகின்றன.

இதனால், ஒவ்வொரு நியமனமும், ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதுகலை ஆசிரியர் நியமன வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்னும் நிலுவையில் உள்ளன.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில் தேர்வு நடத்திய போதும், இதுவரை, பணிநியமனம்நடக்கவில்லை. தமிழ் பாடத்திற்கு மட்டும், 625 பேர், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதர பாடங்களுக்கான நியமனம், வழக்குகளில் சிக்கி உள்ளது.இதனால், வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

வழக்குகள் எப்போது முடியும், இறுதி பட்டியல் எப்போது வரும் என, தெரியாத சூழல் உள்ளது.இது குறித்து, முதுகலை தேர்வர்கள் சிலர் கூறியதாவது:ஆசிரியர் நியமனவழக்குகளை, மாணவர்கள் கல்வி நலன் கருதி, விரைந்து முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்தின் அவசியத்தை, உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி, வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.

2 comments:

  1. யாருக்கும் அக்கரையில்லை தேர்ச்சி அடைந்தவர்கள் பற்றி

    ReplyDelete
  2. please All selected candidates under Tamil medium priority quota 2011-12 for Economics, History, Commerce write a pray petition to CM cell with request of early appointment orders with down loaded copy of TRB SELECTED intimation to force the TRB/ Pallikavithurai. since we are suffered more than 15 months .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி