உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2014

உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை


"உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள , பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக் காலத்திற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,
அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் நிர்வாகிகள்,
உயர்கல்வித்துறை செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

அதற்கான தகுதிகளாக, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' தேர்ச்சி மற்றும் பி.எச்.டி., பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதேனும் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தால், அப்பணிக் காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வீதம், 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதியான, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' மற்றும் பி.எச்.டி., போன்றவற்றை முடித்துள்ளனர். ஆனால், அவர்களால், உதவிப் பேராசிரியர் பணிக்கு, செல்ல முடியவில்லை. ஏனெனில், அவர்களின் பணிக்காலம், கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. எனவே, அவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு, தகுதி பெற்ற காலம் முதல், அவர்களின் பணிக்காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கான தனி அரசாணையை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பிலும், மனு கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி