உபரி பணியிட மாறுதல்களை கைவிட வலியுறுத்தி ஜூன் 12-ல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2014

உபரி பணியிட மாறுதல்களை கைவிட வலியுறுத்தி ஜூன் 12-ல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி

தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்விஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் பவுல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரராஜன், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பணிநிரவல் மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும், முறையற்ற மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு முறையில் பொதுமாறுதல்களை உடனே வழங்க வேண்டும், பட்டதாரிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஜூன் 12-ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 comment:

  1. அப்ப உபரி ஆசிரியர்களை என்ன செய்வது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி