பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு: காலை 5 மணிக்கு இனி போன் வரும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு: காலை 5 மணிக்கு இனி போன் வரும்!


கர்நாடகா மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது.
அதிகாலையில், மாணவர்களை படிப்பதற்கு எழுப்பி விடும்படி, அவர்களின் பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு விடுக்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக, கிம்மன் ரத்னாகர் பதவி வகிக்கிறார். இவர், தட்சண கன்னடா மாவட்டத்தில், சமீபத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து, பல்வேறுதரப்பினரிடமும் ஆலோசனை கேட்டார்.

இதன் அடிப்படையில், புதிய முடிவு ஒன்றை அவர் எடுத்துள்ளார். இதன்படி, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு, அவர்களின் ஆசிரியர்கள் மூலமாக, தினமும் அதிகாலை 5:00 மணிக்கு, மொபைல் போன்மூலமாக அழைப்பு வரும். அப்போது, ஆசிரியர்கள், 'உங்கள் பையன் படிப்பதற்கு எழுந்து விட்டானா? இல்லையெனில், எழுப்பிவிட்டு, படிக்கச் சொல்லுங்கள்' என, அறிவுறுத்த உள்ளனர். முதல் கட்டமாக, தட்சண கன்னடா மாவட்டத்தில் மட்டும், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாநிலம் முழுவதும், இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி