பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!


தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால தேவைகள்மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத், சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கொண்டை கடலை புலாவ், கறிவேப்பிலை சாதம், மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறி சாதம், தக்காளி சாதம் என வழங்கப்படுகிறது. இதுதவிர ஆம்லேட், முட்டை பொடிமாஸ், முட்டை வறுவல், அவித்த முட்டை என 4 வகையாக முட்டை 5 நாட்கள் வழங்கப்படுகிறது. சென்னையிலிருந்து 20 சிறந்த சமையல் கலை வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டு 32 மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள சத்துணவு பணியாளர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2013-2014ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.1588,65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலவை சாதம் திட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Varverkathakkathu...... Ivai elam arasu pallil padikkum manavargalin nalan karuthie seyal paduthukidanar.... Ithai Purinthu kondu manavargal arasu pallil kalvi payila petrorkalum, arasu ooliyargalum munvara vendum enbathe engal aasaai...

    ReplyDelete
  3. சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் வேலை செய்பவர்களுக்கு சந்தோசம் கொண்டாட்டம்

    ReplyDelete
  4. போதுமான ஆசிரியர்களை நியமிக்காமல் பொங்க சோறு போட்டு என்ன பயன் ???????

    ReplyDelete
  5. போதுமான ஆசிரியர்களை நியமிக்காமல் பொங்க சோறு போட்டு என்ன பயன் ???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி