அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உத்தரவு.


அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 என்பதில் இருந்து மாற்றி பிற மாநிலங்களில் உள்ளது போல் 60 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
நேற்று மீண்டும் முதல் மந்திரி உமர் அப்துல்லாவை அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தங்களது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர். இது தொடர்பாக மந்திரிசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், நேற்று நடந்த கேபினட் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.இதேபோல், அரசு பணியில் சேருபவர்களுக்கான வயது உச்சவரம்பும் 37-லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த இரு உத்தரவும் ஜுன் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி