பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள், 'தத்கல்'திட்டத்தின் கீழ், வரும், 6,7ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
தேர்வுத்துறை அறிவிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி, சில பாடங்களில் தோல்வி அடைந்த, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தனிதேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். விரைவில் நடக்க உள்ள,உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் மட்டும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, வரும், 6,7ம் தேதிகளில், நேரில் சென்று, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.அப்போது, தேர்வு கட்டணம், 125 ரூபாய், சிறப்பு கட்டணம், 500 ரூபாய், பதிவு கட்டணம், 50 ரூபாய் என, 675 ரூபாயை, பணமாக, முதன்மை கல்வி அலுவலகங்களில் செலுத்த வேண்டும். 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி