ஜிப்மர் நுழைவுத்தேர்வு: 90 ஆயிரம் பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2014

ஜிப்மர் நுழைவுத்தேர்வு: 90 ஆயிரம் பேர் பங்கேற்பு.


்ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 376 மையங்களில் நேற்று நடந்தது. முதன் முறையாக ஆன் - லைன் மூலம் நடந்த இத்தேர்வில் 90 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மார்ச் முதல் ஆன்-லைனில் பெறப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 92 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, நுழைவுத் தேர்வு முதல் முறையாக ஆன்-லைன் மூலம் நாடு முழுவதும் 42 நகரங்களில், 376 மையங்களில் நேற்று நடந்தது.காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை நடந்த தேர்வினை 90 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டத்தை தடுக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவு, புகைப்படம் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.மொத்தமுள்ள, 150 இடங்களில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்காக 40 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. நுழைவுத்தேர்வு முடிவுகள் மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி