பி.எட். படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2014

பி.எட். படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு


தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் பி.எட். படிப்பை நடத்தி வருகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி அனுபவம் உடைய பட்டதாரிகள் சேரலாம்.

தற்போது தொடர்ந்து பணியில் இருந்து வர வேண்டும். தமிழ்வழிக்கு 500 இடங்களும், ஆங்கிலவழிக்கு 500 இடங்களும் உள்ளன.2014-2015-ம் கல்விஆண்டில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் ஆகஸ்ட்14-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.500. பல்கலைக்கழக மண்டல அலுவலகங்கள் மற்றும் கல்வி மையங்களில் விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ள லாம். இந்த விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.tnou.ac.in) தெரிந்துகொள்ளலாம்.மேலும், இந்த இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் திக்கொள்ளலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது விண் ணப்பக் கட்டணமாக ரூ.500-க்கு ‘தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை-15’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டை இணைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற ரூ.550-க்கு டிமாண்ட் டிராப்டை பல்கலைக் கழகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பல்கலைக் கழகத்துக்கு ஆகஸ்ட் 14-ம்தேதிக் குள் அனுப்ப வேண்டும்.

நுழைவுத்தேர்வு இல்லை:

சேர்க்கை பணி அக்டோபர் மாதம் தொடங்கும். நுழைவுத் தேர்வும் ஏதும் கிடையாது. வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள்அறிய 044-24306657, 24306658 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.முருகன் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. TNOU vil PG course exam answer sheet evalution pannamale thorayamaga mark pottu,fail panni irukkanka.so yarum tnou vil pg course serathinka.pls aatharam ullathu.

    ReplyDelete
  2. Nejamava brother....b.ed join pannalama..
    Pls give information. About that

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி