அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2014

அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.


தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் பேராசிரியை எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள நர்ஸிங் பள்ளிகள் மற்றும் நர்ஸிங் கல்லூரிகளுக்கு தமிழக அரசு,இந்திய நர்ஸிங் கவுன்சில், தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் ஆகியவை அங்கீகாரம் அளிக்கின்றன. இந்த மூன்று அமைப்புகளால் அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்வி நிறுவனங்களில் படித்தால்தான் அப்படிப்பு முறையான படிப்பாக கருதப்படும்.எனவே, நர்ஸிங் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் தாங்கள் தேர்வுசெய்யும் நர்ஸிங் பள்ளி அல்லது நர்ஸிங் கல்லூரி அங்கீகாரம் பெற்றதுதானா? என்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றநர்ஸிங் பள்ளிகள் மற்றும் நர்ஸிங் கல்லூரிகளின் பட்டியல் தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் (www.tamilnadunursingcouncil.com) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை பார்த்து அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்வி நிறுவனங்களை அறிந்துகொள்ளுமாறு மாணவ-மாணவிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் அலுவலகம் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் (சாந்தோம் சர்ச் அருகில்) உள்ள ஜெயபிரகாஷ் நாராயணன் மாளிகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி