பி.எட், எம்.எட் படிப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2014

பி.எட், எம்.எட் படிப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை.


தனியார் கல்வியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட், எம்.எட் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி என 102 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது.

இதில் 15 மையங்களாக பிரிக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வித்தாளில் எந்தவித குழப்பமும் இல்லை.கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக ரெப்ரசண்டேடிவ், பறக்கும்படை என மூன்றடுக்கு கண்காணிப்பு உள்ளது. சுமார் 75 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்ற ஆண்டு தேர்வு எழுதி அரியர் உள்ள மாணவர்கள் 5 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கல்வியியல் கல்வியின் தரத்தை உயர்த்த பிஎட் கல்வியை இரண்டு ஆண்டுகளாக மாற்ற தேசிய ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (என்சிடிஇ) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து வெப்சைட்டில் மாணவர்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கல்வியியல் கல்வி இரண்டாண்டுகளாக மாற்றப்படுமா என்பது தெரியவரும்.தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பணம் வாங்க கூடாதுஎன அரசு ஆணையை தமிழக முதல்வர் பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் முழுவதும் வழங்கப்படும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பணத்தை கல்லூரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. பல கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகு, தேர்வுக்கு மட்டுமே வருகிறர்கள் இந்த நிலையை மாற்றினாலே கல்வி தரம் உயரும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி