அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2014

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம்.


அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தலைமை வகித்தார்.

வழக்குரைஞர் ம.சு. சுதர்சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழக அரசு முதல்கட்டமாக 2013-14ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளிலும், உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பிரிவுகளைத் தொடங்கியது.இப்போது, இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பயிற்றுமொழிப்பிரிவுகளைத் தொடங்கியுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு வரைஅனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். இதேநிலை தொடர்ந்தால் 12ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் அதிகரித்து தமிழ்வழிப் பிரிவுகள் குறையத் தொடங்கும்.கடலூர் மாவட்டத்தில் 2013-14ஆம் ஆண்டில் 162 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழிப் பிரிவே இல்லை. ஆங்கில வழிப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. 21 நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.நிகழாண்டு ஆங்கிலவழிப் பிரிவில் 1.25 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

33 comments:

  1. This is the wonderful plan of TN govt. For only the cheap politics Advertisement you are making strike.could you honestly tell where your children are studying..?.Please don't do this nonsense.This will affect the poor children only.Please avoid oppose this scheme.

    ReplyDelete
    Replies
    1. If you people have really guts ,Do strike for all private schools for their English medium education.Why you are not against private school. Don't prepare to spoil poor children life.IF YOU SPOIL OTHER POOR CHILDREN,S OPPORTUNITY SURELY YOUR CHILDREN WILL BE GET SPOILED BY GOD.

      Delete
    2. What you are telling it is perfect correct.

      Delete
    3. பிரச்சனை தமிழ்வழிக் கல்வியா, ஆங்கிலவழிக் கல்வியா என்பதில்லை. அது தாய்மொழி வழிக்கல்வியா என்பதே… பெரிய பெரிய கல்வி உளவியாளர்கள் ரூஸோ -விலிருந்து தேசதந்தை மகாத்மா காந்தி வரை ஆதரித்தது தாய்மொழிவழிக் கல்வியே…. தாய்மொழிவழிக் கல்வியால் மட்டுமே அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க முடியும்… அரசு பள்ளிகளில் 12 ஆண்டுகள் ஒரு மொழியை முழுமையாக கற்றுத்தர முடியாத நிலையென்பது அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கையாளாகாத் தனமும், அரசினுடைய பொறுப்பற்ற தனத்தையுமே காட்டுகிறது… பிரச்சனை பள்ளிகளில் இல்லை, ஆசிரியர்களிடத்திலும், அரசிடமே உள்ளது.
      அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க தயங்குகிற ஆசிரியர்கள் ஏன் அரசு பள்ளிகளில் மட்டும் வேலையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும், எதற்காக பணியாற்ற வேண்டும். அரசு பள்ளிகளில் போதுமான வசதிகள் இல்லையென்று பார்க்கும் வேலையை விட்டுவிட்டு ஓடிபோய்விடலாமே.. ஏன் ஓடவில்லை.
      பணியிட மாறுதல், பணிநிரவல் வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏழைக்குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வீதிகளில் நாய் பிடிப்பதுபோல ஏன் அலையவேண்டும். அவர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திருக்கலாமே… செய்தார்கள் என்று சொல்ல முடியுமா…?
      பணியில் உள்ள ஆசிரியர்கள் தனது பிள்ளைகளின் நலன் மட்டுமே கருதி, எல்லா அடிப்படை வசதி, தரமான கல்வி நோக்கி தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் அரசுபள்ளி ஆசிரியர்கள், இலட்சக்கணக்கான குழந்தைகள் அடிப்படை வசதியான குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதிக்கூட இல்லாத அரசுப்பள்ளிகளில் படிப்பதைப்பற்றி ஏன் கவலைப்படவில்லை. தான் பணிபுரியும் பள்ளிகளின் தரம் குறித்து என்றவாது கவலைப்பட்டதுண்டா, அப்படி கவலை பட்டிருந்தால் அந்த பள்ளிகள் அதே நிலைமயில் நீடிக்குமா,,,? அந்த பள்ளிகளை தரமான பள்ளியாக மாற்ற எத்தனை முறை கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்திருப்பார்கள், எத்தனை முறை ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருப்பார்கள், மாணவர்களை திரட்டி ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பார்கள் என்று சொல்ல முடியுமா அவர்களால்… வெட்கமாக இல்லை அவர்களுக்கு…?
      அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி உழைப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ளவர்களே….. அரசை சொல்லி குற்றமில்லை. அரசு எந்திரம் தனியாரை வளர்த்தெடுக்கவே விரும்பும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாது. அரசு எந்திரம் அதிலும் தனக்கு ஆதாயத்தையும், விளம்பரத்தையும் மட்டுமே தேடிக்கொள்ள பார்க்கும்… அக்கறை இருந்திருந்தால் அரசு பள்ளிகளை சீரழிந்துபோக விட்டுருக்காது. தனியார் பள்ளிகளை ஊக்குவித்து தனியார் பள்ளிகளின் லாப வேட்டைக்கு துணைபோயிருக்காது. கல்வி கடைசரக்காகியிருக்காது…
      அரசு பள்ளிகளை மேம்படுத்த இன்று வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்கால திட்டந்தான் என்ன…? அரசு சம்பளம் கைநிறைய பெறவேண்டும், தான் பணிபுரியும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லையென்று ஓலமிட்டுக்கொண்டு, தனது சந்ததிகளை மட்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். எவன் பிள்ளை எப்படி போனால் என்ன என்று பத்தோடு பதினொன்றாக இருந்துவிட போகிறீர்கள் அப்படித்தானே,,,?

      Delete
  2. உங்களுக்கு வேண்டாம் என்று கூறுங்கள் போராடுகிறவர்கள் பிள்ளை கள் எந்த வழியில் பயில்கின்றர்.ஏழைகளை வாழவே விடமாட்டீர்களா.உங்கள் பிள்ளைகளை முதலில் தமிழ்வழியில் சேரூங்கள்.

    ReplyDelete
  3. இந்த அரசு கல்வித்துறைகளை பல புதிய மாற்றங்களைசெய்துகொண்டு வருகிறதுவரவேற்க்கவேண்டியது அதைவிட்டு போராட்டம் ஒரு கேடு தைரியம் இருந்தால் போராட்டக்காரர்கள் விவாதிக்க தயாரா மதிகெட்டவர்களே.

    ReplyDelete
    Replies
    1. புதிய மாற்றங்களை செய்துகொண்டு வருவது வரவேற்க்கவேண்டியது தான். ஆனால் இன்னும் ஆங்கில வழி பாட புத்தகம் பல பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. அப்படி இருக்கையில் மாணவர்களின் நிலைமை ?

      Delete
  4. கேலிக்கூத்து

    ReplyDelete
    Replies
    1. கேலி கூத்து மாணவர்களுக்குமா?

      Delete
    2. மாணவர்களின் வாழ்க்கை கேளிக்கூத்தாக ஆகிவிடக்கூடாது என்பதற்க்காகதான்.

      Delete
  5. சோற்றுக்கே வழியில்லை மொழிப்பற்று ஒரு கேடா.மொழிப்பற்று என்றபோர்வையில் இந்த தமிழ்சமுதாயத்தை சீரழித்து விட்டார்கள்.இதை தான் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.தமிழ் காட்டூமிராண்டி மொழீ என்று பழமையை பேசிக்கொண்டே வாழ்பவன்.

    ReplyDelete
    Replies
    1. மொழிப் பற்றைக் குறித்து தவறாக எழுதாதீர்கள்.மொழி என்றால்,மொழிப் பற்று என்றால்,என் தாய் மொழி தமிழைப் பற்றி என்ன தெரியும்?

      முதலில் பெரியாரே தமிழர் அல்ல.அவரே மிகப் பெரிய விமர்சனத்தை எதிர்கொண்டவர்.அவர் எழுதியதை இங்கு உதாராணம் காட்டத் தேவையில்லை.

      Delete
    2. தமிழ் படித்த தமிழ் அறிஞ்ஞரே தெலுங்கு ம் திராவிட மொழிதான் மாறி புதியதொறு தோற்றத்தில் உள்ளது தெலுங்கர்கள்க்கூட வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துவிட்டனர் தந்தை பெரியார் இல்லைஎன்றால் இன்னமூம் கோவனம் தான் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்.நான் தமிழன் ஏன் தமிழ்மேல் இவ்வளவூ வெறுப்பு ஏன் என்றால் அது இன்னமும் பழைமை என்னும் சேற்றில் சிக்க வைக்கிறது.

      Delete
    3. திரு மணியரசன் மகனுக்கோ.மகளுக்கோ தமிழை பாடமாக எடுத்து படிக்கவைக்க தயாரா திருமணம் ஆன பிறகு.தாங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு தாங்கள் சிந்தித்து தங்கள் வழியில் மிகச்சரியாக பேசக்கூடியர்.

      Delete
    4. எனக்கு தமிழ்ப்பற்று இல்லை ஆனால் தமிழர் பற்று உண்டு.தமிழர் வாழவேண்டும் குறிப்பாக வளர்ச்சி அடையவேண்டும் என்பதுதான் என் ஆசை.தமிழன் ஒரு பன்மொழி புலமைபெற்றவனாக மாறவேண்டும்.

      Delete
    5. Periyar patri thavarana thagavalai parappa vendam...avar tamilukku aatriya panigal Patri ungaluku theriyathu ena ennugiren...avar illayendral indraiku naam illai....avar oru theerkadharisi

      Delete
    6. தெலுங்கு மட்டுமல்ல கன்னடம்,மலையாளம்,துளு,என 16 மொழிகள் திராவிட குடும்பத்தையே சேர்ந்ததுததுதான்.திராவிட மொழிகளுக்கெல்லாம் மூல மொழி தமிழ் தான்.

      கோவணம் கட்டுபவர்கள் இப்போது இல்லையென்று சொல்ல வருகிறீர்களா?

      எது பழமை என்னும் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கிறது? என் தமிழா? தமிழ் குறித்த உங்களது சிந்தனை இன்னும் update செய்யப் படவில்லை என்று நினைக்கிறேன்.

      இதே கல்விசெய்தியில் 3 மாதங்களுக்கு முன்பு என்னுடைய பதிவுகளை பாருங்கள்.ஏனெனில் எனக்கு ஒரே கருத்தைத் திரும்பவும் எழுத பிடிக்காது.

      எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.திருமணமான பிறகு பிறக்கும் என் குழந்தைகளையும் நிச்சயம் தமிழ் படிக்கவும்,தமிழில் படிக்கவும் அறிவுறுத்துவேன்.

      தமிழ் பற்று இல்லாமல் தமிழர் பற்று எங்கே வந்தது? எப்படி வந்தது?

      Delete
  6. Pavi kobama irukingalo! Cmnts lam fire ah iruku.

    ReplyDelete
    Replies
    1. தமிழர் பற்று அவ்வளவுதான்

      Delete
  7. சிங்கல தமிழன் உயிரோடு இருக்கிறான்.தமிழ் பேசும் தமிழ்ன் செத்துக்கொண்டு இருக்கிறான்

    ReplyDelete
  8. Replies
    1. Ok யாருமே இல்லாத கடையில ஏன் கஷ்ட்டப்பட்டு டீ ஆத்திக்கிட்டூ. போய்ட்டு வரேன்.

      Delete
  9. ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம். இது ஒரு அரசியல் சாயம் பூசப்பட்ட சுயநலம் மிகுந்த வாக்குவாதம். போராடுபவர்களுக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் மக்கள் மத்தியில் சுயவிளம்பரம் படுத்திக்கொண்டு, நம்மை ஆயுதங்களாக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள்.

    இப்படி முழங்கும் எத்தனை நபர்கள் தங்கள் குழந்தைளை மற்றும் அவர்கள் சந்ததியினரை தமிழ் வழி கல்வி பயில ஊக்கப் படுத்தியிருப்பார்கள் என்பது சந்தேகமே. இப்படி போராட்டம் செய்தவர்கள் இப்பவும் ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளி நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    அன்றே தமிழன் திரைகடல் ஓடித் திரவியம் தேடினான் அவனை உலகம் வியந்து பார்த்தது.
    களவும் கற்று மற என்பது தமிழ் பழமொழி.

    திரு வைகோ (அரசியல் வாதியாக அல்ல) ஒரு நல்ல தமிழ் இலக்கியவாதி என்பது நாம் அறிந்ததே. மேலும் அவர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவரும் கூட. அவரின் இனிமையான தமிழை இப்பவும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

    காலத்திற்கு ஏற்ற கோலம், ஆங்கில வழி கல்வி என்பது காலத்தின் கட்டாயமும் கூட.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அன்றைய தமிழன் உலகத்தையே சுற்றினான். ஆனால் இன்றைய தமிழன் சென்னையிலேயே அன்னிய நாட்டில் இருப்பதைப் போல் உணர்கிறான். திடலில் ஓட வேண்டிய குதிரை ஏனோ இன்னும் குண்டுச்சட்டியை விட்டு வெளியே வர மறுக்கிறது. யாமறிந்த மொழிகளிலே என்றுதான் பாரதி சொன்னான். பிற மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை ஆனால் தாய்மொழியே தெரியாதது போல் நடிப்பது தான் தவறு.

      Delete
    2. Good...! Good.....! V.Good.....!

      Delete
    3. புதியாதாக ஒன்றை குழந்தைகள் கற்பதால் நன்மை தானே?????

      Delete
  10. First everyone should understand the meaning of 'English Medium'. The medium of instruction to the students should be in English IE the subject should be taught in English. For example when I was in my college some students from Pennsylvania University took a six month course to study Basic Tamil. My principal taught them Tamil but through English. If you want to speak English you do not want to study in English medium. I know some persons in Madurai junction who can speak English, German, Spanish, Japanese and all Indian English, but unfortunately they cannot read and write Tamil. English is just a language. If you want speak English it should come by practice.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. English is just a language. Gaining proficiency in that language does not make u knowledgeable..

    ReplyDelete
  13. But by being a voracious reder one can develope ones knowledge. READiNG maketh a perfect man.

    ReplyDelete
  14. Ithu private palli kollayargalin attuyum itharkku puplic atharavu tharatheergal.

    ReplyDelete
  15. Nanbar mr.maniyarasan avarkale ungal cmnts and katturaikalai kadantha oru varudamaga parkiren mika mika arumai. but intha angila vazhi kalvi murai pattriya ungal karthu thavaru. mr.alex and mr.pavi avarkal karthuthan sariayanthu. kooduthalaga oru mozhiyai yelai manavan karpathu enpathu paaratta pada vendia ondru. athai viduthu angilathai ethirkiren, hindi yai ethirkiren endru kooruvathellam moodathanam. thamil patru ulla, thamilai uir moochaga kondu valnthu varuvathaga koorikollum thamil aringanarkalin veetu pillaigal thamil vazhiyil than payilkirargala. Ubathesam enbathu ooruku mattum thana? koorungal nanbar avarkaley !? nan thamilai ethirka villai, thamilodu serthu mattra mozhikalaium kattru kodungal endru than koorukiren. nandri.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு திருப்பதி ஜெய் sir.

      கூடுதலாக ஒரு மொழியை கற்பது தவறு என்பது என் வாதமல்ல sir.

      பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் ;
      இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் ;
      மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை ;
      திறமான புலமைஎனில் வெளிநாட்டோர்
      அதைவணக்கம் செய்தல் வேண்டும்

      என்றானே பாரதி அதைத்தான் நான் விரும்புகிறேன்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி