ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியை! மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2014

ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியை! மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்.


கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவி பெறும் துவக்க பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 71 மாணவ, மாணவிகள் பள்ளியில் படிக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் வீசிய 'தானே' புயலில் இப்பள்ளி கட்டடம் முற்றிலும் சேதமானது. இதுவரை புதியதாக கட்டடம் கட்டாததால், சமுதாயக் கூடத்தில் பள்ளி இயங்குகிறது.

ஒரே அறையில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் நடப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். இதில், ஒரு ஆண்டுக்கு முன் ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக வேறு ஆசிரியரை நியமிக்கவில்லை. 6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருக்குப் பதிலாகவும் வேறு ஒருவரும் நியமிக்கப்படவில்லை.தற்போது ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். இவர் ஒருவரை ஐந்து வகுப்புகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால் பாடம் நடத்த முடியவில்லை. இவர் விடுமுறை எடுத்தால் அன்று பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதுபற்றி அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்ளாமல்அலட்சியமாக உள்ளனர். உடனடியாக கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கா விட்டால்பள்ளிக்குப் பூட்டு போடும் போராட்டம் நடத்த பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

5 comments:

  1. Students strength irukaradhala transfer la teacher ah fill panna chance iruku.otherwise tet pap 1 passed qualified teacher ah appoint pannalam.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. adada yenne aasiriyarin thiramai!!!!


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி