ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் பணி: விண்ணப்பம் அனுப்ப அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் பணி: விண்ணப்பம் அனுப்ப அழைப்பு.


மகப்பேறு நிதி உதவி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இந்திரா காந்தி மகப்பேறுநிதியுதவி திட்டத்தின் கீழ் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணியாற்ற தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் சுய விளக்க குறிப்புகள் மற்றும் கல்வி தகுதி சான்றுகளுடன் மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு பதிவு தபால் ஒப்புகை அட்டையுடன் வரும் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திராகாந்தி மகப்பேறு நிதி உதவி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம், ஒன்றுக்கு (ஒப்பந்த ஊதியம் மாதம் 20,000), சமூக அறிவியல், வாழ்க்கை அறிவியல், ஊட்டச்சத்து, நல மேலாண்மை, சமூக பணிகள், ஊரக மேலாண்மை ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.பிற வகுப்பினர் 30 வயதுக்குள்ளும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. மற்றும் எம்.பி.சி. ஆகியோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும். எம்.எஸ். ஆஃபீஸ் கையாளுவதில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.இந்திராகாந்தி மகப்பேறு நிதியுதவி திட்ட மாவட்ட உதவியாளர் பணியிடம் ஒன்றுக்கு (ஒப்பந்த ஊதியம் மாதம் பத்தாயிரம் ரூபாய்) சமூக அறிவியல், சமூக பணிகள், ஊரக மேலாண்மை, புள்ளியியல் ஆகிய ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிற வகுப்பினர் 30 வயதுக்குள்ளும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. மற்றும் எம்.பி.சி. ஆகியோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஓராண்டு அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். எம்.எஸ். ஆபீஸ் கையாளுவதில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.விண்ணப்பங்களை "மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டம், 70 அடி ரோடு, ஏழாவது வீதி, என்.ஜி.ஜி.ஓ., காலனி, சூரம்பட்டி, ஈரோடு" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி