ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளிக்கு பூட்டுபோட்டு பெற்றோர்கள் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளிக்கு பூட்டுபோட்டு பெற்றோர்கள் போராட்டம்


திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுக்க மணப்பாறை நகராட்சியில் உள்ள செவலூரில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிற பள்ளி இந்த கல்வி ஆண்டு முதல் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டுவரை 3 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனால் போதிய ஆசிரியர்களை நியமிக்ககோரி கடந்த ஆண்டே பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக போதிய ஆசிரியர்களை நியமிப்பதாக கூறிய கல்வித்துறைஅதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் தற்போது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் அதே 3 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிவதால் போதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் எனக்கோரிசெவ்வாய்க்கிழமை பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டுபோட்டு தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்பாமல் போராட்டம் நடத்தினர்.தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகையன், மணப்பாறை வட்டாட்சியர் கமலக்கண்ணன் மற்றும் காவல்துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போதிய ஆசிரியர்களை நியமிக்காததால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் எனவும் புகார் தெரிவித்தனர். மேலும் 1938ம் ஆண்டு பள்ளி ஆரம்பிக்கப்பட்டபோது கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று ஓடுகள் உடைந்து விழுந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது.

அக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக ஒரு கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இப்பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை அருகில் உள்ள பொய்கைப்பட்டி பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்கள் இங்கு பணியமர்த்தப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ்பெற்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.பெற்றோர்களின் திடீர் போராட்டத்தால் காலை 9.30 மணிக்கு துவங்கவேண்டிய பள்ளி 3 மணிநேரம் தாமதமாக மதியம் 12.30 மணிக்கு துவங்கியது.

8 comments:

  1. ஏங்க இப்பத்தான் நம்ம ஆளுங்க அரசானையை விட்டிருக்காங்க ...அடுத்து என்ன பன்னலாம்னு ரூம் போட்டு ேயாசிப்பாங்க

    ReplyDelete
  2. இன்று நல்ல செய்தி வந்தது.. மிக்க மகிழ்ச்சி.. கூடியவிரைவில் தரப்பட்டியலும் , இறுதிப்பட்டியலும் வரவேண்டும் ..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கலைச்செல்வன் மற்றும் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி.. தகவலை அதிக சிரத்தையுடன் சேகரித்து இங்கு கொடுத்தீர்கள் .. மேலும் நல்ல பல தகவல்களை கிடைத்தவுடன் தெரிவியுங்கள்...

      Delete
  3. Please explain the difference between "Rank list" and "Final list". Anybody

    ReplyDelete
    Replies
    1. Rank list means all passed candidates name in the list
      Final list means selected (job conform) candidates name only in the list

      Delete
  4. Vijay kumar sir pis computer science selection patri therindhal sollungalen

    ReplyDelete
  5. Vijay kumar sir pis computer science selection patri therindhal sollungalen

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி