பி.எஃப். வரம்பு: புதிய அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

பி.எஃப். வரம்பு: புதிய அறிவிப்பு


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) நிறுவனங்களின் பங்களிப்பைகுறைந்தபட்சமாக நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.மாதந்தோறும் பிடித்தம் செய்யும் அதிகபட்ச கட்டாயத் தொகை அளவு ரூ.6,500 ஆக உள்ளது.

ஊழியர்கள் பெறும் மாதாந்திர அடிப்படைச் சம்பள அடிப்படையில் கணக்கிடப்பட்டு கட்டாய தொகை வரம்பு ரூ.6,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.பி.எஃப் சட்டத்தின்படி ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீதம் செலுத்த வேண்டும். இதில் ஊழியரின் பங்களிப்போடு தங்களின் பங்களிப்பாக 12 சதவீதத்தை நிறுவனம் செலுத்த வேண்டும். இதில் அதிகபட்ச கட்டாய வரம்பாக ரூ.6,500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இத்தொகையை ஊழியர்களும் நிறுவனமும் விரும்பும் பட்சத்தில் அதிகரித்துக் கொள்ள முடியும். ஆனால் இவ்விதம் செலுத்தும் தொகையின் குறைந்தபட்ச அளவை நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள புதிய விதிமுறை வழிவகுத்துள்ளது.

இப்போது பணியில் சேரும் இளம் தலைமுறையினர் பி.எஃப்-பில் பணம் போடுவதைவிட வீடு வாங்கி கடன் அடைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்புதிய விதிமுறை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முன்னணி தகவல் தொழில்நுட்பத் துறையின் மனித வள பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி