சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் கோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2014

சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் கோர்ட் உத்தரவு.


மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு இரண்டு விடைகளில் ஏதாவது ஒன்றை அளித்திருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்ததேர்வில் வேலூர் மாவட்டம் வீராரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரும் பங்கேற்றார்; 81 மதிப்பெண் பெற்றார். கேள்விகளுக்கான விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில் கடலை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு என்ற கேள்விக்குஆழி என பதில் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு, ஈஸ்வரி தரப்பில், ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.சமுத்திரம் தான் சரியான பதில் என தெரிவித்திருந்தார். ஏற்கனவே வெளியிட்ட விடைத்தாள் அடிப்படையில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட கேள்விக்கு சரியான விடை அளித்தும், மதிப்பெண் அளிக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரி மனு தாக்கல் செய்தார்.

ஆதாரம்

மனுவை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். நிபுணர்களின் கருத்தை பெற முதுகலை பட்டம் பெற்ற மூன்று தமிழ் ஆசிரியர்களை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர்களிடம்கருத்து பெறப்பட்டது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன், "கடலை மட்டும் குறிக்காத சொல் என்பதற்கு, சமுத்திரம் என்பதும் சரியான பதில் தான். சமுத்திரம் என்பதற்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற அர்த்தங்கள் உள்ளன" என்றார். இதற்கு ஆதாரமாக சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதி- தமிழ் அகரமுதலி, சாரதா பதிப்பகம் வெளியிட்ட தமிழ் அகராதியை வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் தாக்கல் செய்தார்.அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் எம்.ராஜேஸ்வரன், "ஆழி என்பதுதான், சரியான விடை. ஆழி என்பதற்கு கடல், மோதிரம், சக்கரம் என பொருள் உள்ளது. நிபுணர்களும் இது தான் சரி என கூறியுள்ளனர்" என்றார்.

அனைவருக்கும்...

மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றத்துக்கு வந்த நிபுணர்கள் ஆழி தான் சரியான விடை; சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல; எனவேசமுத்திரம் சரியான விடை அல்ல என கூறியுள்ளனர். சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல என கூறுவதை நான் ஏற்கவில்லை. அது, தமிழ் வார்த்தை அல்ல என்றால், தமிழ் அகராதிகளில் சமுத்திரம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்காது.ஆனால் சமுத்திரம் என்பதற்கு மூன்று விதமான அர்த்தங்கள் இருப்பது, தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள கீ விடைத்தாள் முழுமையாக சரியில்லாததால், மனுதாரருக்கு அளிக்கும் பயன் மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது.எனவே கடலினை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு என்ற கேள்விக்கு, ஆழி என்றோ சமுத்திரம் என்றோ விடை அளித்திருந்தால், அவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்து திருத்தப்பட்ட முடிவை வெளியிட வேண்டும். ஒரு வாரத்துக்குள் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. SPECIAL TNTET 2014 - சம்பந்தமாக (மட்டும்) நம் தகவல்களை பகிர என் தாெடர்புக்கு - 9787172067
      நன்றி.

      Delete
  2. exam mudicha next day case potu unga niyathai solli eruntha..............ethu evlo problema maruma?

    engaya ponnenga evlo nala?

    veena enimale problem create panathenga................

    ethuku trb matum karanam ella........

    question set pandunathu tamil la phd vanguna aluga..........

    athuku trb ena pana mudium....?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. News from RTI

    In Chemistry Teacher Only

    2011-12 to 2013 May Vacancy 1453

    But passed candidate 643

    But in 2012 they have allotted 820 in 2012 notification
    (OC=254 ,BC=217, BCM=30, MBC=164,SC=123, SCA=25, PH=8).

    But Qualified only 643

    In OC (254 )All get Job
    BC=allotted 214, Get job =189 ,Backlog=28

    BCM=allotted 30, Get job =12 ,Backlog=18

    MBC=allotted 164, Get job =132 ,Backlog=32

    SC=allotted 123, Get job =32 ,Backlog=91

    SCA=allotted 25, Get job=7 ,Backlog=18

    PH=allotted 8, Get job =2 ,Backlog=6

    Totally Backlog is 193,

    2011-2012 to 2013 total vacancy is 1453 - Qualified 643= Remaining 810

    But out of 810 Backlog is 193 (All community except OC)

    2013 vacancy only is 633

    (OC=196+ Backlog =0),
    (BC=168+ Backlog =28),
    (BCM=22+ Backlog =18),
    (MBC=126+ Backlog =32),
    (SC=95+ Backlog =91),
    (SCA=19+ Backlog =18),
    (PH=6 Backlog =6).

    thanks

    ReplyDelete
    Replies
    1. jaya priya madam neenga sonnathu pola jul 3rd or 4th list viduvangala.

      Delete
    2. BCM KU THANIYA CUT OFF IRUKUMA JAYA PRIYA MAM PLS TELL?

      Delete
  4. 90 க்கு கீழ மார்க் எடுத்தவங்க எல்லாம் கேஸ் போட்டு வேலைக்கு போக போறாங்க. அதிக மார்க் எடுத்த. நாம கல்விசெய்திய வேடிக்கை பார்த்துக்கிட்டு, கமெண்ட் குடுத்துட்டு இருக்கோம். கேஸ் போடலாம்னு முடிவு செய்து நான்கு பேர் ரெடியா இருக்கோம். 90 க்கு மேல் பெற்றவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.

    இறு போராட மறந்தவர்கள் என்றும் வாய்ப்பு இல்லாமல் கூட போய்விடும். வாய்ப்பு நம் கத வை தட்டி கொண்டடு நிற்காது. நமது வாய்ப்பை நழுவவிடகூடாது.

    94421 86176

    ReplyDelete
  5. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Coming Tuesday enga teamoda case vara poguthu........
    Naanga 82-89 eduthavarkaluku ethiranavarkal alllaaa......
    Above 90- Ku aatharavanavarkal alllaaaa.....
    Tamilnadu government relaxationai miss use pannum piraphakar manuvai thallupadi seithum.... TRB posting poda viraivaga nadavadikai edukka uttharavidavum......
    INI varum kaalangalil sariyana murayai amal padutha koriya manu.......
    Need your command......
    Aatharavaga irunthalum ethirpaga irunthalum sollunga pls pls.....
    Ethavathu oru mudivu edukalam OK.....
    adharavu therivika virumbubavargal thangaludaiya hall ticket& call letter ai
    rajalingam.rp@gmail.com
    Ku email anupivaiyungal
    Nanri !

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி