கர்நாடகத்தில் 2008-09 ஆம் ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சுமியா, சரண்யா, ஜெகதீஸ்வரி உள்பட 10 பேர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:நாங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூன்று கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.எட்.) படிக்கிறோம்.கடந்த 2008-09 ஆம் கல்வியாண்டில் படிப்பில் சேர்ந்தோம். இரண்டாமாண்டு தேர்வு எழுதும் நேரத்தில், தமிழக அரசு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு அரசாணை வெளியிட்டது.அதில், 2008-09-ஆம் கல்வி ஆண்டு முதல் வெளி மாநிலங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க மாட்டோம்.
தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகத்தில் 2002-ஆம் ஆண்டுமுதல் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. அதனால், அந்த பாடத் திட்டத்துக்கும், தமிழகப் பாடத் திட்டத்துக்கும் அதிகளவு வித்தியாசங்கள்உள்ளன. எனவே, வெளிமாநிலத்தில் பயிலும் மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டது.நாங்கள் 2008- 09-ஆம் கல்வியாண்டில் சேர்ந்து விட்டோம். எங்களின் இரண்டாவது ஆண்டு படிப்பை முடிக்கும் நேரத்தில் தமிழக அரசு அவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவினால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே, அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர்.சுரேஷ்குமார் ஆஜராகி, மனுதாரர் 2008-ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்ந்து விட்டனர். ஆனால், தமிழக அரசு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான்வெளிமாநிலத்தில் படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க மாட்டோம் என உத்தரவிட்டது.இது, 2008-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு எவ்வாறு பொருந்தும். அதனால்,அந்த கல்வியாண்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் எஸ்.கோமதி நாயகம் ஆஜராகி, கல்வியின் தரத்தை உயர்த்தவே புதியப் பாடத்திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதர மாநிலங்களை விட தமிழகம் கல்வித் தரத்தில் மேலோங்கி உள்ளது. இதனால், இதர மாநிலங்களில் படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க முடியாது என வாதாடினார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அரசாணைக்கு இந்த நீதிமன்றம் உடன்படுகிறது. அந்த அரசாணை 2009-ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர்கள் 2008-09 ஆம் கல்வி ஆண்டிலேயே இதர மாநிலத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்புக்காக சேர்ந்து விட்டனர்.அவர்கள் இரண்டாவது ஆண்டில் 8 மாதங்கள் படித்த பிறகு தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகதான் அரசு அவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அந்த அரசாணையை ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால், அந்த கல்வியாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை பரிசீலிக்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர்களின் சான்றிதழ்களை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்களின் சான்றிதழ்களை தமிழக அரசு பரிசீலனை செய்யலாம்.ஆனால் அவர்களுக்கு அங்கு எந்த மிடியம் படித்தார்களே அந்த மிடியத்திற்கு தான் பணிநியமனம் செய்ய வேண்டும்
ReplyDeleteஎன்ன நியாயம்
ReplyDeleteதமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் தமிழ்,ஆங்கிலம், தெலுங்கு,கன்னட வழி பயின்றவர்களுக்கு எந்த மொழி வழியாக ஆசிரியர் பயிற்சி பயின்றார்களே அந்த மொழி வழி பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படுகிறர்கள். ஆனால் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் ஆங்கில வழி கல்வி பயின்ற தமிழக மாணவர்களுக்கு தமிழ் வழி பணியிடம் வழங்குவது என்ன நியாயம்.
vanthaarai vaaza vaikum thamizagam thamizanai varumail vaada vaikirathu. ithanal thaan tamilnatil tamilil padithavarkalukku 20% munnirmai, appo meethi ellam angila vazhiil padithavarko. melum veli manilangalil kuraivana kattanam, vaaram oru class ena kelvipatten. tamilnadu ena vana thaan.
ReplyDelete