சி.பி.எஸ்.இ. மீது மோகம் ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

சி.பி.எஸ்.இ. மீது மோகம் ஏன்?


தமிழ்நாட்டில் பல கல்வித்திட்டங்கள் இருந்தாலும், பொதுவாக இரு கல்வித்திட்டத்தின் கீழ்தான் சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வந்தபிறகு, மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

தமிழக கல்வித்திட்டம் அதாவது சமச்சீர் கல்வித்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மத்திய செகண்டரி போர்டு கல்வித்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள். இந்த பள்ளிக்கூடங்களை பொதுவாக சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் என்றே அழைப்பார்கள்.

இதில், சில பள்ளிக்கூடங்கள்மத்திய அரசங்கமே நடத்தும் கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் தனியாராலேயே நடத்தப்படுகின்றன. இந்தப் பள்ளிக்கூடங்களை சாதாரண, ஏன் ஏழை–எளிய மக்கள் மட்டுமல்லாமல், குறைந்த வருவாய்பெரும் சாதாரண நடுத்தர மக்கள்கூட நினைத்துப்பார்க்க முடியாது. முன்பெல்லாம் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்க இந்தியா முழுவதிலும் இடமாறுதலுக்கு வாய்ப்பு உள்ள பெற்றோர்கள்தான் செல்வார்கள். ஏனெனில், இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் இருக்கும் நிலையில், ஒரே கல்வித்திட்டம் என்பதால் எந்த மாநிலத்துக்கு பணிநிமித்தமாக இடமாறுதல் செய்யப்பட்டாலும், அங்கு போய்தங்கள் குழந்தைகளை எந்த கஷ்டமும் இல்லாமல் பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கைதான்.ஆனால், காலப்போக்கில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள்மீது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் ஒரு மோகம் ஏற்பட்டுவிட்டதால், அந்த பள்ளிக்கூடங்களுக்கு கடும் கிராக்கி இருக்கிறது. இதன்காரணமாக வணிக ரீதியிலும் தனியார் ஏராளமான பள்ளிக்கூடங்களைத்தொடங்குகிறார்கள். 2001–2002–ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 6,293 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்தைஎட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக பள்ளிக்கூடங்கள் தொடங்கவேண்டும் என நினைக்கும் தனியாரில் பெரும்பாலானோர் இந்த சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களைத்தொடங்கவே விண்ணப்பிக்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 499 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் இருந்தன. இதில், 122 பள்ளிக்கூடங்கள் சென்னையில் இருக்கிறது. இந்த ஒரே ஆண்டில் மட்டும் புதிதாக 80 பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு நிச்சயமாக அதைவிட அதிகமாக புதிதாக இந்த பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படும். இப்படி எல்லோருக்கும் சி.பி.எஸ்.இ. மோகம் ஏன் இருக்கிறது என்று கேட்டால், பல காரணங்கள் உலா வருகின்றன. கல்வி முறையிலும், நிர்வாகத்திலும் ஏற்பட்டுள்ள சீர்திருத்தம், இந்தபள்ளிக்கூடங்களெல்லாம் மாணவர்களை ஒரு நட்புறவோடு நடத்தும் பாங்கு என்று பள்ளிக்கூடங்கள் தரப்பில் கூறப்படுகிறது. பெற்றோர்கள் தரப்போ, அகில இந்திய அளவில் பல போட்டித்தேர்வுகளை இந்த கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளமுடிகிறது, ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களின் கணக்கைப்பாருங்கள், மொத்த மாணவர்களில் எத்தனை சதவீதம் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் படித்தவர்களாக இருக்கிறார்கள்? என்பதைப் பார்த்தாலேயே புரிந்துவிடும்.

மேலும், இந்த கல்வித்திட்டத்தில் 8–வது வகுப்புவரை மும்மொழி திட்டம் அமல் நடத்தப்படுகிறது. ஆங்கிலம் தவிர, வேறு இருமொழிகளைப் படிக்கமுடியும், இதுபோல 9–வது வகுப்பில் இருந்து பிளஸ்–2 படித்து முடிக்கும்வரை ஆங்கிலம் பாடமொழி என்பதோடு விருப்பப்பட்ட மொழியைப்படிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன்காரணமாக படித்து முடித்தவுடன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பைபெறமுடியும் என்கிறார்கள். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இவை அனைத்தையும் மறுக்கிறார். இதெல்லாம் மாயைதான், தனியார் பள்ளிக்கூடங்கள் தங்களை வணிக ரீதியாகவளப்படுத்திக்கொள்ள பரப்பிய ஒரு தவறான கருத்து என்று சொல்லும் அவர், ஒரு உண்மையை மறைக்கவில்லை. ‘சிலபஸ்’ என்று சொல்லப்படும் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் இருகல்வி முறைகளுக்கும் மாற்றம் இல்லை, ஆனால், பாடநூல் தயாரிப்பிலும், கல்வி முறையிலும்தான் மாற்றம் இருக்கிறது என்கிறார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிக்காமல் என்னென்ன வகையான தவறுகளுக்கு என்னென்ன வகையில் கண்டிக்கலாம்? என்றுவழிமுறைகளை வகுத்துக்கொடுத்து இருக்கிறார்கள். இந்த முறைகளெல்லாம் மாணவர்களை துன்புறுத்தாமல் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தும் வகையில் இருக்கிறது.தமிழக அரசை பொறுத்தமட்டில், ஆசிரியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தில் நல்ல சம்பளம் கொடுக்கிறது. கல்வித்துறையும் சி.பி.எஸ்.இ. நடைமுறைப்படுத்தும் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, மாணவர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடநூல்களைத்தயாரித்து கற்பிக்கும் முறையிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி